இந்திய வேதியியல் ஆராய்ச்சி சங்கம்
இந்திய வேதியியல் ஆராய்ச்சி சங்கம் (Chemical Research Society of India-CRSI) என்பது இந்தியாவை அடிப்படையாகக் கொண்டவேதியியல் துறை ஆய்விற்காக அர்ப்பணிக்கப்பட்ட அறிவியல் அமைப்பாகும். இது 1999-ல் இந்தியாவின் 50வது விடுதலை தினத்தைக் கொண்டாடும் ஒரு பகுதியாக நிறுவப்பட்டது.[1] இதன் நிறுவனத் தலைவர் சி. நா. இரா. ராவ் ஆவார். இந்த அமைப்பில் தற்போது 3000 வாழ்நாள் உறுப்பினர்கள் உள்ளனர்.[2]
உருவாக்கம் | 1999 |
---|---|
தலைமையகம் | பெங்களூரு |
தலைமையகம் | |
உறுப்பினர்கள் | வாழ்நாள் 3000+ |
ஆட்சி மொழி | ஆங்கிலம் |
தலைவர் | வினோத் கே. சிங் |
முக்கிய நபர்கள் | சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ் |
வலைத்தளம் | https://crsi-india.org/ |
நோக்கம் & செயல்பாடு
தொகுஇந்திய வேதியியல் ஆராய்ச்சி சங்கத்தின் முக்கிய நோக்கங்களாக, வேதியியல் மற்றும் வேதியியல் அறிவியலில் ஆய்வு மேற்கொள்பவரின் திறமைகளை அங்கீகரிப்பது, ஊக்குவித்தல் மற்றும் வளர்ப்பது மற்றும் அனைத்து நிலைகளிலும் வேதியில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது ஆகும். வேதியியலின் அனைத்து பிரிவுகளிலும் ஆராய்ச்சியை எளிதாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கு மாநாடுகள், கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், மற்றும் பிற தொடர்புடைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது. வேதியியல் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இந்திய வேதியியல் ஆராய்ச்சி சங்கம், இலண்டன் அரச வேதியியல் சமூகம், அமெரிக்க வேதியியல் சமூகம், ஆசிய வேதியியல் தொகுப்பாளர் சமூகம், செருமானிய வேதியியல் சமூகம் மற்றும் பிரான்சு வேதியியல் சமூகம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது.
விருதுகள்
தொகுஇந்த சங்கத்தின் சார்பில் இந்திய வேதியியலாளர்களுக்கு, வெண்கலப் பதக்கம், வெள்ளிப் பதக்கம், தங்கப் பதக்கம் வழங்குவதோடு கீழ்கண்ட விருதுகளும் வழங்கப்படுகின்றன.
- சாருசிதா சக்ரவர்த்தி நினைவு சொற்பொழிவு
- தர்ஷன் இரங்கநாதன் நினைவு சொற்பொழிவு
- மிசுஷிமா-ராமன் விரிவுரை
- பேராசிரியர் அனிமேஷ் சக்ரவர்த்தி விருது விரிவுரை
- பேராசிரியர் சி.என்.ஆர். ராவ் விருது விரிவுரை
- பேராசிரியர் சி.என்.ஆர். ராவ் ரசாயன ஆராய்ச்சிக்கான தேசிய பரிசு
- பேராசிரியர் எஸ்.சந்திரசேகரன் நன்கொடை விரிவுரை
மேற்கோள்கள்
தொகு- ↑ "International Cooperation Agreement; Chemical Research Society of India". rsc.org. பார்க்கப்பட்ட நாள் 1 June 2014.
- ↑ "Bronze medal for contribution to chemistry". indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 1 June 2014.