இந்திய - திபெத் எல்லைக் காவல்படை

இந்திய - திபெத் எல்லைக் காவல்படை (Indo-Tibetan Border Police -ITBP) என்பது இந்திய - சீன எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளில் ஒன்றாகும். லடாக் பகுதியிலுள்ள கரகோரம் கணவாய் முதல் அருணாசலப் பிரதேசம் ஜசிப் லா என்ற இடம்வரையுள்ள 3488கி.மீ இந்திய-சீன எல்லையை பாதுகாக்கிறது. பனி பனிப்புயல், பனிப்பாறை சரிவுகள், நிலச்சரிவுகள் போன்ற இயற்கை சீற்றங்களுடன் -40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும் 9000 முதல் 18000 அடி உயரத்தில் எல்லையை காக்கிறார்கள். உள்நாட்டு மருத்துவ முகாம், பேரழிவுக்கால மேலாண்மை, அணுக்கரு மற்றும் கதிர் விபத்து, உயிரியல் மற்றும் வேதியல் பேரழிவுகள் போன்ற சூழல்களுக்கு ஏற்ப இப்படை பயிற்சிப் பெற்றுள்ளது. பொசுனியா எர்செகோவினா, கொசோவோ, எயிட்டி, சூடான் மற்றும் எந்த நாட்டிலும் ஐ.நா. அமைதி நடவடிக்கைகளில் பங்குகொள்கிறது. மலைகளில் மீட்புபணி புரிவதாலும், இயற்கை பேரழிவுகள் நடக்குமிடம் என்பதாலும் இப்படையின் பெரும்பாலனவர்களுக்கு மலையேற்றமும், பனிச்சறுக்கும் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது

இந்திய - திபெத் எல்லைக் காவல்படை
சுருக்கம்ஐ.டி.பி.பி.(Indo-Tibetan Border Police)
குறிக்கோள்வீரம் - முனைப்பு - அர்ப்பணம்
துறையின் கண்ணோட்டம்
உருவாக்கம்அக்டோபர் 24, 1962
அதிகார வரம்பு அமைப்பு
செயல்பாட்டு அதிகார வரம்புஇந்தியா
ஆட்சிக் குழுமத்திய உள்துறை அமைச்சகம் (இந்தியா)
செயல்பாட்டு அமைப்பு
துறை நிருவாகி
  • ரஞ்சித் சின்ஹா, தலைமை இயக்குநர்
இணையத்தளம்
http://itbp.gov.in/

வரலாறு

தொகு

இந்திய - திபெத் எல்லைக் காவல்படை 1962 அக்டோபர் 24ல் மத்திய சேமக் காவல் படைச் சட்டம் மூலமாக உருவாக்கப்பட்டது. பின்னர் இந்திய - திபெத் எல்லைக் காவல்படைச் சட்டம் உருவாக்கப்பட்டு 1994 முதல் மறுவரையறை செய்யப்பட்டது[1]. இப்படையின் முதல் தலைமை இயக்குநர் சர்தார் பால்பீர் சிங் ஆவார்.

பணிகள்

தொகு

பல்நோக்கு பணிகள் இப்படையில் பணிகள் பின்வருவன:

  • நாட்டின் வடஎல்லையை கண்காணித்தல், எல்லை மீறல்களை கண்டுபிடித்து தடுத்தல் மற்றும் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்புணர்வை அளித்தல்.
  • எல்லை ஊடுருவல், கடத்தல் போன்ற குற்றங்களை தடுத்தல்
  • முக்கிய நபர்களுக்கும், வங்கிகளுக்கும், முக்கிய கட்டுமானங்களுக்கும் பாதுகாப்பளித்தல்
  • இயற்கை பேரழிவு கொண்ட இடங்களில் மீட்புபணிபுரிந்து நிலைமையை மீட்டி பேணுதல்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Of ITBP உருவான கதை". Archived from the original on 2011-12-19. Retrieved 2012-04-07.