இந்திராவதி அணை
இந்திராவதி அணை இந்திராவதி ஆறு மீது கட்டப்பட்டுள்ள ஈர்ப்பு அணை ஆகும். இது இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள பவானிபட்னாவிலிருந்து சுமார் 90 கி. மீ தொலைவில் உள்ளது. இது முதன்மை இந்திராவதி நீர்த்தேக்கத்துடன் 4.32 கி. மீ., நீண்ட மற்றும் 7 மீட்டர் குறுக்களவு கொண்ட சுரங்கப்பாதை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் வெளியேற்றத் திறன் 210 கனமீட்டர்/விநாடி ஆகும். மேலும் இது ஒரு எழுச்சி தண்டை சுழற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அணை ஆகும்.
இந்திராவதி அணை ଇନ୍ଦ୍ରାବତୀ ଜଳବନ୍ଧ | |
---|---|
முகிகுடா மின்நிலையம் | |
அதிகாரபூர்வ பெயர் | மேல் இந்திராவதி மின் நிலையம் |
அமைவிடம் | ஒடிசா மாநிலம் பவானிபட்வினால் இருந்து 90கிமி |
புவியியல் ஆள்கூற்று | 19°16′34.8″N 082°49′42.4″E / 19.276333°N 82.828444°E |
கட்டத் தொடங்கியது | 1978 |
திறந்தது | 2001 |
அணையும் வழிகாலும் | |
வகை | ஈர்ப்பு அணை |
தடுக்கப்படும் ஆறு | இந்திராவதி ஆறு |
உயரம் | 45 m (148 அடி) |
நீளம் | 539 m (1,768 அடி) |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | மேல் இந்திராவதி |
மொத்தம் கொள் அளவு | 2,300,000,000 m3 (1,900,000 acre⋅ft)[1] |
நீர்ப்பிடிப்பு பகுதி | 2,630 km2 (1,020 sq mi) |
மேற்பரப்பு பகுதி | 110 km2 (42 sq mi) |
மேல் இந்திராவதி மின் நிலையம் | |
ஆள்கூறுகள் | 19°25′37.2″N 082°51′22.7″E / 19.427000°N 82.856306°E |
இயக்குனர்(கள்) | OHPC |
பணியமர்த்தம் | 1999 |
சுழலிகள் | 4 x 150 Francis-type |
நிறுவப்பட்ட திறன் | 600 MW |
மேல் இந்திராவதி திட்டமானது, இந்திராவதி நதியின் நீர் மகாநதி படுகையில் பாயுமாறு வகுக்கப்பட்டிருக்கிறது. இது மின் உற்பத்தி மற்றும் நீர்ப்பாசன வசதிக்காக பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, இந்திராவதி மற்றும் அதன் கிளை நதிகளில் 4 அணைகள் கட்டுதல், 8 கரைகளுடன் கூடிய இணைப்புக் கால்வாய்கள் அமைத்து 1,435.5 மில்லியன் கனமீட்டர் நேரடி திறன் கொண்ட ஒரே நீர் தேக்கத்தை உருவாக்குதல், ஹதி மற்றும் மஹாநதி ஆற்றுப் படுகைகளுக்கு இடையே ஒரு தடுப்பை உருவாக்குதல் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Upper Indravati Multi Purpose Project JI02388". India WRIS. Archived from the original on 26 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 11 February 2016.
- ↑ "Indrawati Dam D01012". India WRIS. Archived from the original on 18 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 February 2016.