இந்துக் கோவில்

இந்துக்கள் வணங்குவதற்கான இடம்
(இந்து கோவில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்துக் கோயில் (சமசுகிருதம்: मन्दिर , (प्रासाद means palace ) கடவுளரின் இல்லமாகும்.[1] இங்குள்ள கட்டமைப்பும் வெளியிடமும் மனிதர்களையும் கடவுள்களையும் ஒருங்கிணைக்கும் வண்ணம் இந்து சமய தத்துவங்களையும் கருத்துக்களையும் சின்னங்கள் மூலமாக வெளிப்படுத்தும் வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன.[2] இந்துக் கோயில், ஜார்ஜ் மிசெல் கூற்றுப்படி, மாயை சூழ் உலகிலிருந்து ஞானமும் உண்மையுமான உலகிற்கு பயணிக்க தூண்டுமாறு அமைந்துள்ளது.[1]

சில இந்துக் கோயில்கள்
சீதையம்மன் கோயிலின் வெளித்தோற்றம், நுவரேலியா, இலங்கை
திருவட்டாறு - ஆதிகேசவ பெருமாள் கோயில் முன்தோற்றம்

இந்துக் கோயிலின் கட்டமைப்பும் சின்னங்களும்[2] வேதம்சார் ஆகமங்களின்படி அமைக்கப்படுகின்றன. இந்து தத்துவத்தின் அனைத்துக் கூறுகளும் - நல்லன, அல்லன மற்றும் மனிதம் தவிர காலச்சக்கரத்தின் சுழற்சியையும் வாழ்வியல் கூறுகளையும் - மேலும் இந்து சமய அடையாளமாக அறம், காமம், பொருள், வீடுபேறு, கர்மாக்களைச் சித்தரிக்கும் சின்னங்களையும் இந்துக் கோயில் உள்ளடக்கி உள்ளது.[3][4]

இந்துக் கோயில்களின் வகைகள்

தொகு

கரக்கோயில், ஞாழற் கோயில், கொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் என ஆறுவகையான கோயில்கள் உள்ளன.

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டு மற்றும்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே - திருஅடைவு திருத்தாண்டம் - திருநாவுக்கரசர்

இந்த கோயில் வகையைப் பற்றி திருநாவுக்கரசு சுவாமிகள் தன்னுடைய திருஅடைவு திருத்தாண்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.[5][6]

மேற்சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்துக்_கோவில்&oldid=3736396" இலிருந்து மீள்விக்கப்பட்டது