இந்து புரி

இந்தியப் மேசைப்பந்தாட்ட வீராங்கனை

இந்து புரி (Indu Puri) என்பவர் செப்டம்பர் 14ஆம் நாள் 1953ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்த மேசைப்பந்தாட்ட பெண் வீராங்கனை ஆவார்.[1] இவர் 1970 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பன்னாட்டு பெண்கள் மேசைப்பந்தாட்டப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். இவர் எட்டு முறை தேசிய பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார். இவரது அதிகபட்ச தரவரிசை பட்டியலில் சர்வதேச அளவில் 63 (1985), ஆசிய அளவில் 8, மற்றும் காமன்வெல்த் பொது நலவாய விளையாட்டுகள் அளவில் (2)ஆம் இடத்தையும் பெற்றுள்ளார். 1978 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த ஆசிய டேபிள் டென்னிஸ் வாகையாளர் விளையாட்டுப் போட்டியில் வட கொரியாவின்உலக வாகையாளர் பாக் யுங்-சன்னை வீழ்த்தி வென்ற முதல் இந்திய பெண் ஆவார்.[2]

இந்து புரி
Indu Puri
தேசியம்இந்தியா
வதிவிடம்டெல்லி
உயர் தரநிலை63
பிறப்பு14 செப்டம்பர் 1953 (1953-09-14) (அகவை 69)
கொல்கத்தா

மேற்கோள்கள்தொகு

  1. Tom Alter. "Indu Puri". sportsweek, 5-11 June 1985. pp. 27–34. 
  2. Encyclopædia Britannica (India) (2000). Students' Britannica India. Popular Prakashan. பக். 98–99. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85229-760-5. https://books.google.com/books?id=DPP7O3nb3g0C&pg=PA99. பார்த்த நாள்: 12 March 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_புரி&oldid=3179283" இருந்து மீள்விக்கப்பட்டது