இந்து மக்கள் கட்சி

இந்து மக்கள் கட்சி என்பது தமிழ்நாட்டிலுள்ள, இந்து சமயம் சார்ந்த ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சியின் தற்போதைய தலைவர் அர்ஜூன் சம்பத் ஆவார்.[1]

இந்து மக்கள் கட்சி
தலைவர்அர்ஜீன்சம்பத்
தொடக்கம்1993
இணையதளம்
http://imkhindu.com

வரலாறு

ஆர். எஸ். எஸ், இந்து முன்னணி, பா.ஜ.க உள்ளிட்ட சங்க பரிவார் அமைப்புகளில் பணியாற்றிய அர்ஜூன் சம்பத்தால் 1993 ஆம் ஆண்டு, இந்து மக்கள் கட்சி அமைப்பு ரீதியாக தொடங்கப்பட்டது.

கோரிக்கைகள்

  • சாதி வெறியைத் தூண்டும் சங்கங்களைத் தடைசெய்ய வேண்டும்.
  • அனைத்து சூதாட்டங்களையும் தடைசெய்ய வேண்டும்.
  • மதுக்கடைகளையும், போதைப் பொருட்களையும் தடைசெய்ய வேண்டும்.
  • ஆபாசமாகப் பெண்களைச் சித்தரிக்கும் சினிமா, பத்திரிக்கைகளைத் தடைசெய்ய வேண்டும்.
  • அனைத்து மதத்தவருக்கும் பொதுவான சிவில் சட்டம் தேவை.
  • ஆலயங்களின் நிர்வாகத்தை அரசு மற்றும் அரசியல் சார்பற்ற அறவோர் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
  • காவிரி ஆற்றில் தமிழகத்திற்குரிய பாரம்பரிய உரிமைகளைக் காப்பற்ற வேண்டும்.
  • கச்சத் தீவில் தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
  • ஊழல் அரசியல்வாதிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும்.
  • ஆறுகளைத் தேசியமாக்க வேண்டும்.
  • தென்னகத்தின் நதி நீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
  • காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள விசேஷ அந்தஸ்து போல், தமிழகத்திற்கும் வழங்க வேண்டும்.
  • பாகிஸ்தான் மீது போர் தொடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்க வேண்டும்.
  • இலங்கை மீது போர் தொடுத்து தனித் தமிழீழம் அமைத்திட வேண்டும்.
  • இந்து யாத்ரிகர்களுக்கும் ஹஜ் பயனிகளை போல உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர் உரிமையை நிலைநாட்டுதல்.
  • சுற்றுச் சூழலுக்கு கேடு செய்யும் அனல் மின்சாரம் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் அனுமின்சாரம் ஆகியவற்றை எதிர்ப்பது, சூரிய ஒளி, காற்றாலை, நீர் மின்சாரத்தை ஊக்குவித்தல்.

அரசியல் நிகழ்வுகள்

  • தமிழ்த் திரைப்பட நடிகர்கள் பலர் மீது மதரீதியான மற்றும் பண்பாட்டு ரீதியான புகார்கள் கொடுத்துள்ளது.
  • கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்கவும், தமிழீழ மக்களுக்கு ஆதரவாகவும், விடுதலைப்புலிகளை ஆதரித்தும் போராடி வருகிறது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கூடாது- அர்ஜூன் சம்பத்". Archived from the original on 2019-04-14. பார்க்கப்பட்ட நாள் 2019-04-14.மாலைமலர் (அக்டோபர் 02, 2018)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_மக்கள்_கட்சி&oldid=4167245" இலிருந்து மீள்விக்கப்பட்டது