இந்தோனேசிய காத்தாடிகள் அருங்காட்சியகம்

இந்தோனேசிய காத்தாடிகள் அருங்காட்சியகம் (Kites Museum of Indonesia) (அருங்காட்சியகம் லயாங்-லயாங் இந்தோனேசியா) தெற்கு ஜகார்த்தாவின் பாண்டோக் லாபுவில் காத்தாடிகளுக்காக அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.[1] இது இந்தோனேசியாவின் முதல் காத்தாடி அருங்காட்சியகம் ஆகக் கருதப்படுகிறது.

துவக்கம் தொகு

காத்தாடிகள் அருங்காட்சியகம் 2003 ஆம் ஆண்டில் எண்டாங் எர்னாவதி என்பவரால் கட்டப்பட்டது. இந்தோனேசியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து பல வகையான காத்தாடிகளை அவர் சேகரித்தார். இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் 600 க்கும் மேற்பட்ட காத்தாடிகள் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

சிறப்பு தொகு

இந்தோனேசியாவில் ஜகார்த்தா சிறப்பு பிராந்தியத்தை பார்வையிடுவது செய்யும் செலவுக்கும் ஏற்ப நிம்மதியைத் தருவதாகும். ஏனெனில் இப்பகுதியில் பார்க்கத்தக்க வேண்டிய பல வகையான இடங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றாகக் கருதப்படுவது சிலாண்டக் துணை மாவட்டத்தில் அமைந்துள்ள இது இந்தோனிசிய காத்தாடிகள் அருங்காட்சியகம் ஆகும். உள்ளூர் மக்கள் இந்த அருங்காட்சியகத்தை லயாங்-லயாங் அருங்காட்சியகம் என்று அழைக்கிறார்கள். பெயருக்கு ஏற்றாற்போல அதில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ள கட்டிடத்தில் பல்வேறு வகையான காத்தாடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது பார்வையாளர்களுக்காக அனைத்து நாளும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால் விடுமுறை நாட்கள். நுழைவு கட்டணம் மிகவும் மலிவானது என்று கூறிவிட முடியாது. பெரும்பாலும், இங்கு பார்வையிட வருகின்ற பார்வையாளர்கள் மாணவர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் என்ற நிலைகளில் அமைகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, வருவோர் பல இடங்களிலிருந்து பெறப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள காத்தாடிகளின் தனித்துவமான சேகரிப்பைக் காண விரும்புகின்றார்கள்.[2]

வசதிகள் தொகு

அளவைப் பொறுத்தவரை, இந்தோனேசிய காத்தாடிகள் அருங்காட்சியகம் மிகவும் பெரிய அருங்காட்சியகம் அல்ல. வார இறுதி நாட்களில் இந்த அருங்காட்சியகத்தினைச் சுற்றிப் பார்ப்பது சற்று சிரமத்தையே தரும். ஏனென்றால் அந்த நாள்களில் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருவார்கள். அவர்களில் குறிப்பாக குழந்தைகள் அதிகமாகக் காணப்படுவர். இருந்த போதிலும், பார்வையிடுவோருக்கு நிழல் தரும் மரங்கள் மற்றும் அழகான தாவரங்கள் அவரவர் தத்தம் வீட்டில் உள்ள சூழலைத் தந்து விடுகின்றன. உண்மையில் சொல்லப்போனால் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுப்பதற்காக அங்கு சில மேசைகள் மற்றும் ஒரு கெஸெபோ என்கிற [3], எண்கோண வடிவில் அல்லது சிறு கோபுரம் வடிவில் பெரும்பாலும் ஒரு பூங்கா, தோட்டம் அல்லது விசாலமான பொது இடங்களில் ஓய்வெடுக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள, அமைப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் சுற்றுலா பயணிகள் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்க முடியும். அருங்காட்சியகத்தின் வடிவமைப்பு மிகவும் பாரம்பரியமாக அமைந்துள்ளது. அதே சமயத்தில் அதில் ஒரு கம்பீரத் தன்மையையும் காணமுடியும். இந்த அருங்காட்சியகத்தில் கழிப்பறைகள் மற்றும் ஒரு முஷோலா [4] ஒரு மசூதி போன்ற பொதுவாக சிறிய அளவிலான மற்றும் பிரார்த்தனைக்குரிய குர்ஆன் முஸ்லிம்களுக்கு பாராயணம் செய்யும் இடம், ஆகிய வசதிகளைக் கொண்டு அமைந்துள்ளன. அவை அனைத்தும் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நுழைவுச்கீட்டு விற்கின்ற இடத்தில் உணவுகள் மற்றும் பானங்களைப் பார்வையாளர்கள் வாங்கிக்கொள்ள வசதி உள்ளது.[2]

சுற்றிப் பார்த்தல் தொகு

அங்கு வருகின்ற பார்வையாளர்கள் மற்றும் விருந்தினர்கள் அருங்காட்சியகத்தை சுற்றி வர அனுமதிக்கப்படுகிறார்கள். கிடைக்கக்கூடிய அனைத்து அறைகளையும் ஆராய்ந்து பார்க்க அவர்களுக்கு அனுமதி உண்டு. இருப்பினும், காத்தாடிகள் மற்றும் தொடர்புடைய தகவல்களைப் பற்றிய ஆவணப்பட வீடியோ ரசிக்கும் வகையில் அங்கு திரையிடப்படுகிறது. இது நுழைவாயிலின் அருகில் அமைந்துள்ளது. பின்னர் அந்த அருங்காட்சியகத்தைச் சுற்றி ஒரு சிறிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு அனைத்தையும் சுற்றிப் பார்க்கலாம். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு காத்தாடிகளின் பல வகைகள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஜாக்லோ இல்லம் [5] என்று அழைக்கப்படுகின்ற ஜாவா மக்களின் பாரம்பரிய இல்ல வடிவத்தைக் கொண்டு அமைந்துள்ள முதன்மை கட்டிடத்தில் இவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த காத்தாடிகளைப் பற்றிய அனைத்து முழுமையான விளக்கங்கள் அங்கு தரப்பட்டுள்ளன. இன்னும், ஒரு சுற்றுலா வழிகாட்டியின் துணையோடு செல்லும்போது மேலும் பல செய்திகளைப் பெற முடியும். ஆகவே வழிகாட்டியைத் துணைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைக்கப்படுகிறது.[2]

காத்தாடி வகைகள் தொகு

இந்தோனேசிய காத்தாடிகள் அருங்காட்சியகத்தில் மூன்று வகையான காத்தாடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை பண்பாடு, போட்டிக்கானவை, மற்றும் விளையாட்டுக்குரியரியவை என்ற மூன்று வெவ்வேறு வகைகளில் அடங்கும். இங்குள்ள காத்தாடிகளில் மிகப்பெரியது 3 மீட்டர் அளவு கொண்ட காத்தாடி ஆகும். இருப்பினும் அனைத்து வகையான காத்தாடிகளும் அங்கு வருகின்ற புகைப்படக்காரர்களை அதிகமாக ஈர்த்து விடுகின்றன. இருப்பினும், அருங்காட்சியகத்திற்குள் படங்களை எடுப்பதற்கு முன்பாக ஒரு திட்டத்தினை வைத்துக்கொள்வது நலம் பயக்கும். பார்வையாளர்களாக அருங்காட்சியகத்திற்கு வருவோர் அங்குள்ள விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க அறிவுறுத்தப்படுகின்றார்கள். அங்கு வருவோர், ஒரு காத்தாடியையோ அல்லது மட்பாண்டங்கள் போன்ற பிற பொருட்களையோ எவ்வாறு தயாரிப்பது என்பதைக் கற்றுக்கொள்ளலாம். வண்ணம் தீட்டுவது மற்றும் பாடிக் தயாரிப்பது போன்றவற்றையும் குழந்தைகள் கற்றுக்கொள்ளலாம்.[2]

குறிப்புகள் தொகு

  1. "Sejarah Museum Layang-Layang, dari Hobi Menjadi Prestasi". Warta Kota. 2012-11-20. பார்க்கப்பட்ட நாள் 2014-05-07.
  2. 2.0 2.1 2.2 2.3 Jakarta Museum of Kites in Cilandak Sub-District, South Jakarta City
  3. Gazebo
  4. முஷோலா நூருல் இஸ்லாம் / பாரிசாலி அர்சிடெக் ஸ்டுடியோ
  5. Joglo