இனத்துவமெய்யியல்

இனத்துவமெய்யியல் என்பது ஒவ்வொரு இனமும் ஒரு மெய்யியலைக் கொண்டிருக்கிறது, வெளிப்படுத்துகின்றது என்ற கருத்தாகும். இது குறிப்பாக, ஆப்பிரிக்க மெய்யியலில் ஒரு முக்கிய பிரிவாக உள்ளது. ஆப்பிரிக்க மக்களின் நம்பிக்கைகள், உலகப் பார்வைகள் ஆகியவற்றை இது ஆவணப்படுத்துகிறது. எனினும், இது ஆவணப்படுத்தலேயன்றி மெய்யியல் இல்லை என்ற விமர்சனம் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனத்துவமெய்யியல்&oldid=3431936" இலிருந்து மீள்விக்கப்பட்டது