இனப்பெயர் (ethnonym) என்பது ஒரு இனக்குழுவுக்கு வழங்கப்பட்ட பெயரைக் குறிக்கும். இனப்பெயர்கள் பொதுவாக இரண்டு வகைப்படும். ஒன்று புறப்பெயர். மற்றது தற்பெயர். புறப்பெயர் என்பது பிற இனத்தவரால் ஒரு இனத்தவருக்கு வழங்கப்படும் பெயர். தற்பெயர் என்பது ஒரு இனத்தவர் தாமே தமக்கு வழங்கிக்கொள்ளும் பெயர். எடுத்துக்காட்டாக செருமனியின் பெரும்பான்மை இனத்தவரை ஜெர்மன் (German) என ஆங்கிலத்தில் அழைப்பர். இது அவர்களுக்கு ஆங்கிலேயர் இட்ட பெயர். அதனால், ஜெர்மன் என்பது அவ்வினத்தவரைக் குறிப்பிட வழங்கும் புறப்பெயர். இவ்வினத்தவர் தம்மைத் தாமே டி டொயிச்சென் (die Deutschen) என அழைப்பர். எனவே இது அவர்களைக் குறிக்கும் தற்பெயர்.[1][2][3]

தமிழர் தொகு

தமிழ் மொழி பேசுவோரைக் குறிக்கும் தமிழர் என்னும் சொல் புறப்பெயரா, தற்பெயரா என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. சிலர் இது வடமொழியினர் மொழிக்கு வழங்கிய ’திரவிட’ என்பதே மருவித் தமிழ் ஆனதாகவும் இதில் இருந்தே தமிழர் என்னும் பெயர் தோன்றியது எனவும் கூறுவர். வேறு சிலர் தமிழ் என்பது தமிழ்ச் சொல் என்றும் அதிலிருந்தே தமிழர் என்னும் இனப்பெயர் உருவானது என்பர்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனப்பெயர்&oldid=3769059" இலிருந்து மீள்விக்கப்பட்டது