இனல்சுக்

குவாரசமிய ஆளுநர்

இனல்சுக் (இறப்பு 1219) என்பவர் 13ஆம் நூற்றாண்டில் இருந்த குவாரசமியப் பேரரசின் ஒற்றார் நகரின் ஆளுநர் ஆவார். செங்கிஸ் கானின் வெற்றிகரமான மற்றும் பேரழிவை ஏற்படுத்திய குவாரசமியப் பேரரசு மீதான மங்கோலியப் படையெடுப்பை தூண்டியதற்கு உதவிகரமாக இருந்ததற்காக இவர் முக்கியமாக அறியப்படுகிறார்.

இவர் குவாரசமியாச் சுல்தான் இரண்டாம் முஹம்மத்தின் மாமா ஆவார். இவரது பெயருக்கு இவரது தாய் மொழியான துருக்கிய மொழியில் "சிறிய இனல்" என்று பொருள். இவர் ஹயர் கான் என்ற பட்டம் பெற்றிருந்தார்.[1]

1218இல் வணிக வண்டிகளுடன் 450 மங்கோலியர்கள் ஒற்றார் நகரை அடைந்தனர். இவர்களில் செங்கிஸ் கானின் ஒரு தூதுவரும் அடங்குவார். இனல்சுக் அவர்களை மங்கோலிய ஒற்றர்கள் என்று குற்றம் சாட்டிக் கைது செய்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Svat Soucek (2002). A History of Inner Asia. Cambridge University Press. p. 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-65704-0.
  2. Leo de Hartog (2004). Genghis Khan: Conqueror of the World. Tauris Parke. pp. 86–87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86064-972-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனல்சுக்&oldid=3454705" இலிருந்து மீள்விக்கப்பட்டது