இனானி கடற்கரை

வங்காளதேசத்திலுள்ள ஒரு கடற்கரை


இனானி கடற்கரை (Inani Beach) வங்காளதேசத்தின் காக்சு பசார் மாவட்டத்திலுள்ள உக்கியா துணைமாவட்டத்தில் உள்ளது. 18 கிலோமீட்டர் நீளம் கொண்ட இது காக்சு பசார் கடற்கரையின் ஓர் அங்கமாக கருதப்படுகிறது. [1][2] இங்கு ஏராளமான பவளக் கற்கள் உள்ளன. இவை மிகவும் கூர்மையானவையாகும். இந்த பவளக் கற்கள் கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் கோடை அல்லது மழைக் காலங்களில் காணப்படுகின்றன. [3] இனானி கடற்கரையின் யாலியாபாலோங்கு பகுதியில் இக்கற்குவியல் காணப்படுகிறது. [4] கிட்டத்தட்ட வருகைதரும் பார்வையாளர்கள் அனைவரும் இங்கு கூடி புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவார்கள்.

இனானி கடற்கரையில் சூரியன் மறைவு
இனானி கடற்கரை

மேற்கோள்கள்

தொகு
  1. Chowdhury, Towhid Hossain (2012). "Ukhia Upazila". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  2. "The Longest Walk begins in Cox's Bazar | Dhaka Tribune" (in en-US). Dhaka Tribune. 2017-03-18. http://www.dhakatribune.com/bangladesh/nation/2017/03/18/longest-walk-begins-coxs-bazar/. 
  3. "A luxury resort opens in Cox's Bazar" (in en). The Daily Star. 2015-02-12. http://www.thedailystar.net/a-luxury-resort-opens-in-coxs-bazar-64362. 
  4. "Hotel Royal Tulip Sea Pearl Beach Resort". Golden_Tulip.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனானி_கடற்கரை&oldid=3072392" இலிருந்து மீள்விக்கப்பட்டது