இன்கா தகவல் பரிமாற்றம்

இன்காக்களுக்கு நல்ல சாலை வசதி இருந்ததால் அவர்களால் சிறந்த அஞ்சல்துறையை உருவாக்க முடிந்தது. மிக விரைவாக செய்திகளை அனுப்பக்கூடிய நம்பகமான அஞ்சல்துறையை உருவாக்கி இருந்தனர்.[1]

செய்தி அனுப்பும் முறைதொகு

கியூப்புதொகு

 
கியூப்பு கயிறு முடிச்சுக்கள், Larco Museum Collection

எழுத்தின் மூலம் செய்தி தெரிவிக்காமல், கியூப்பு என்ற கயிறு முடிச்சுக்களை கொண்டு சாசுகியூக்கள் தகவல் பரிமாற்றம் செய்தனர். அந்த சங்கேத முடிச்சுக்கள் கூறும் செய்தியை அனுப்பநரும் பெருநரும் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். சாசுகியூக்களாலும் கூட தெரிந்து கொள்ள முடியாது.[2]

சாசுகியூதொகு

 
சாசுகியூ ஓட்டக்காரர்கள்

இன்காக்களின் தகவல் பரிமாற்றம் சாசுகியூ என்ற ஒற்றர் படையைச் சேர்ந்த ஓட்டக்காரர்களால் நடத்தப்பட்டது. 2 மைல் தொலைவுக்கு ஒருவர் என்ற வீதம் ஓடிச்சென்று செய்தியை அடுத்தவரிடம் தெரிவித்தனர். இந்த முறையின் மூலமே மாநில ஆளுநருக்கும் பேரரசிற்கும் தகவல் பரிமாற்றம் நடத்தப்பட்டது. தேர்ச்சி மிக்க ஓட்டக்காரர்கள் இதற்காகவே தேர்ந்தெடுக்கப்ப்ட்டிருந்தனர்.[3] அவர்கள் ஒய்வெடுப்பதற்காக டோம்போ ஒய்வரை கோபுரங்கள் இருந்தன.

டோம்போதொகு

டோம்போ கோபுரங்கள் ஒய்வறைகளாக மட்டும் அல்லாமல், அந்நாட்டில் எங்கு கலவரம் நடந்தாலும் அச்செய்திகளை தீமூட்டல் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யும் ஒரு இடமாகவும் இருந்தது. 20 மைல்களுக்கு ஒரு கோபுரம் வீதம் அமைக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் தனி கண்காணிப்பாளர்கள் அமர்த்தப்பட்டனர்.[4]

எடுத்துக்காட்டுதொகு

  1. இன்காக்களின் துணைத்தலைநகரமான குவிட்டோ நகரில் நடந்த ஒரு கலவர நிலவரம், 4 மணி நேரங்களில் குவிட்டோவில் இருந்து 1700 கி.மீ. தொலைவில் இருந்த கஃசுகோ தலைநகரத்தில் உள்ள இன்கா பேரரசரின் காதுக்கு டோம்போ கோபுர கண்காணிப்பாளர்கள் மூலம் சென்றுவிட்டது.[4]
  2. கியூப்பு அஞ்சல் துறை வசதி மூலம் ஒரு செய்தியை 250 மைல்கள் தாண்டி ஒரு நாளைக்குள் கொண்டு செல்ல முடிந்தது.[5]

மேற்கோள்கள்தொகு

  1. The red Indians, essay by Maya lajmi, in The mirror april 1964
  2. Indians of America, by Philip Ainsworth, National geographics volume, ....Each ran at distance.... bearing a Quipu knotted string record..., page-298
  3. Highway of the sun, by Victor. W.Von Hagen, page-80, ....These master architects figured out the distances that the Chasqui couriers would run andwhere their platforms would setup.....
  4. 4.0 4.1 Hindu America, Chamanlal, page-157
  5. அழிக்கப்பட்ட நாகரிகம், நாகேஸ்வரன், குமரிமலர் கட்டுரை, ஏப்ரல் 1946

உசாத்துணைதொகு

  1. Highway of the Sun by Victor von hagen

குறிப்பு: மேல் குறிப்பிட்ட விக்டர் வான் ஹேகன் (Victor von hagen) எழுதியகதிரோனின் பெருவழி (Highway of the Sun) என்ற புத்தகமே இன்கா நாகரிக சாலை அமைப்பு மற்றும் அஞ்சல் துறை பற்றி எழுதப்பட்ட முதல் புத்தகமாகும். இந்த புத்தகத்தின் மூலத்தைக் கொண்டே இன்கா நாகரிக சாலை அமைப்பு மற்றும் அஞ்சல் துறை பற்றிய மற்ற ஆய்வுகள் செய்யப்பட்டன.