இன்ஸ்பயர் திட்டம் அறிவியல் படிக்க திறமையான மாணவர்களை ஊக்குவிப்பதற்கான இந்திய மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் திட்டம். இத்திட்டத்தின் பகுதியாக பிஎஸ்சி, பிஸ், எஸ், எம் எஸ்.சி, பிஎஸ்சி ஆனர்ஸ், ஒருங்கிணைந்த எம் எஸ் படிக்கும் மாணவர்களுக்கு அதாவது இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், புள்ளியியல், ஜியலாஜி... போன்ற அறிவியல் துறைப் படிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பொறியியல், மருத்துவம், தொழில்நுட்ப மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இயலாது.

மாணவர்களுக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும் எனக்குறிப்பிடப்படுகின்றது. நடப்பு ஆண்டில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி 31.10.2014. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. புதிய தலைமுறை; 20 அக்டோபர் 2014; அறிவியல் படிக்கும் 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 80 ஆயிரம் கல்வி உதவித்தொகை; பக்கம் 02,03;

அதிகாரபூர்வ இணையதளம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்ஸ்பயர்&oldid=1745342" இலிருந்து மீள்விக்கப்பட்டது