இபாதி இசுலாம்
இபாதி இயக்கம் (Ibadi movement), இபாதியம் (Ibadism) அல்லது இபாதிய்யா (Ibāḍiyya; அரபு மொழி: الإباضية) என்பது ஓமானில் பெருமளவு பின்பற்றப்படும் இசுலாமிய மார்க்கம் ஆகும்.[1][2] இப்பிரிவினர் குரானை மட்டும் பின்பற்றுபவர்கள். ஆனால் முகமது நபியின் அறிவுரை நூல்களைப் பின்பற்றுவதில்லை.
இவ்வியக்கம் அல்சீரியா, தூனிசியா, லிபியா, கிழக்கு ஆபிரிக்கா ஆகியவற்றின் சில இடங்களிலும் பின்பற்றப்படுகிறது. இந்த இயக்கம் கிபி 650-ல் அல்லது இசுலாமியத் தீர்க்கதரிசி முகம்மது இறந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு, சுன்னி, சியா ஆகிய இரு பிரிவுகளுக்கும் முன்னதாக நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.[3] தற்கால வரலாற்றாசிரியர்கள் கவாரிச்சு இயக்கத்தின் மிதவாதக் கோட்பாட்டின் வழியே இதன் தோற்றத்தைக் காண்கின்றனர்.[4][5][6]:3 சமகால இபாதிகள் தம்மைக் கவாரிச்சுகள் என வகைப்படுத்தப்படுவதை கடுமையாக எதிர்க்கின்றனர், இருப்பினும் அவர்களின் இயக்கம் கிபி 657 கவாரிச்சுகளின் பிரிவினையிலிருந்து தோன்றியது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.[6]:3
குறிப்பிடத்தக்க இபாதிகள்
தொகுஓமான் சுல்தான்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ இஸ்லாமிய சமயப் பிரிவுகள்
- ↑ Vallely, Paul (19 February 2014). "Schism between Sunni and Shia has been poisoning Islam for 1,400 years - and it's getting worse". The Independent.
- ↑ Donald Hawley, Oman, pg. 201. Jubilee edition. Kensington: Stacey International, 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0905743636
- ↑ "Ibadis". The Oxford Dictionary of Islam. (2014). Ed. John L. Esposito. Oxford: Oxford University Press.
- ↑ Lewicki, T. (1971). "al-Ibāḍiyya". The Encyclopaedia of Islam, New Edition, Volume III: H–Iram. Leiden: E. J. Brill. 648–660.
- ↑ 6.0 6.1 Hoffman, Valerie Jon (2012). The Essentials of Ibadi Islam. Syracuse: Syracuse University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780815650843.