இமாங்சு மோகன் சவுத்ரி

இந்திய ஆட்சிப்பணி அலுவலர்

இமாங்சு மோகன் சவுத்ரி (Himangshu Mohan Choudhury) ஓர் இந்திய அரசு ஆட்சிப்பணியாளராவார். இவர் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்காள தேச விடுதலைப் போரின்போது அகதிகள் மற்றும் இராணுவத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். [1][2] இந்திய எல்லை மாநிலமான திரிபுராவில் உள்ள சோனாமுராவில் துணைக் கோட்ட அதிகாரியாக பணிபுரியும் போது, இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கும் பணியை சவுத்ரி மேற்பார்வையிட்டதாக கூறப்படுகிறது. [2] இவரது சேவைக்காக இந்திய அரசாங்கம் இந்தியாவில் வழங்கப்படும் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது. [3] வங்க தேச அரசாங்கமும் வங்காள தேசத்தின் சிறந்த நண்பர் என்ற கௌரவத்தை 2013 ஆம் ஆண்டு வழங்கி சிறப்பித்தது. [1][2]

இமாங்சு மோகன் சவுத்ரி
Himangshu Mohan Choudhury
பிறப்புகேங்டாக், சிக்கிம், இந்தியா
பணிஆட்சிப் பணியாளர்
விருதுகள்பத்மசிறீ
வங்கதேசத்தின் சிறந்த நண்பர்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Ex-IAS officer gets Bangla honour". Hindustan Times. 16 March 2013. பார்க்கப்பட்ட நாள் 3 June 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 2.2 "Bangladesh honour for ex-IAS officer". The Hindu. 24 March 2013. பார்க்கப்பட்ட நாள் 3 June 2015.
  3. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமாங்சு_மோகன்_சவுத்ரி&oldid=3333194" இலிருந்து மீள்விக்கப்பட்டது