இமிடசோலைன்
இமிடசோலைன் (Imidazoline) என்பது C3H6N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இமிடசோல் சேர்மத்தில் உள்ள இரண்டு இரட்டைப் பிணைப்புகளில் ஒன்றை ஒடுக்குவதன் மூலம் இமிடசோலைன் வருவிக்கப்படுகிறது. பல்லினவளையச் சேர்மங்களில் இமிடசோலைனும் ஒரு வகைச் சேர்மமாகும். 2-இமிடசோலைன்கள், 3-இமிடசோலைன்கள் மற்றும் 4-இமிடசோலைன்கள் என்ற மூன்று மாற்றியன்களை இமிடசோலைன் கொண்டுள்ளது. 2- மற்றும் 3- இமிடசோலைன்கள் அவற்றின் மூலக்கூற்று அமைப்பில் ஒரு இமைன் மையத்தைக் கொண்டுள்ளன. ஆனால் 4-இமிடசோலைன்கள் அவற்றின் அமைப்பில் ஓர் ஆல்க்கீன் தொகுதியைப் பெற்றுள்ளன. பல்வேறு மருந்துப் பொருட்களில் 2- இமிடசோலைன் தொகுதி் காணப்படுகிறது[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Liu, H. and Du, D.-M. (2009), Recent Advances in the Synthesis of 2-Imidazolines and Their Applications in Homogeneous Catalysis. Adv. Synth. Catal., 351: 489–519. doi: 10.1002/adsc.200800797