இம்தியாஸ் அலி தாஜ்

சையத் இம்தியாஸ் அலி தாஜ் ( உருது: سیّد امتیاز علی تاؔج‎  ; Sayyid Imtiyāz ʿAlī Tāj 1900-1970) இவர் உருது மொழியில் எழுதிய ஒரு நாடக ஆசிரியராவார்.[1] எல்லாவற்றிற்கும் மேலாக அவர் 1922 ஆம் ஆண்டில் அனார்க்கலியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நாடகத்திற்காக நினைவுக் கூரப்படுகிறார், இது நூற்றுக்கணக்கான முறை அரங்கேறியுள்ளது. மேலும், இந்திய திரைப்படமான முகல்-ஏ-ஆஸம் (1960) உட்பட இந்தியா மற்றும் பாக்கித்தானில் பலத் திரைப்படங்கள் இதைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.[2]

1922 இல் இம்தியாஸ் அலி தாஜின் புத்தகத்தின் தலைப்பு பக்கத்தில் விளக்கப்பட்டுள்ளபடி அனார்கலியின் உருவம்

சுயசரிதை

தொகு

சையத் இம்தியாஸ் அலி 1900 அக்டோபர் 13, இல் லாகூரில் பிறந்தார். இவர் உருது நாடகத்திற்கு அவர் செய்த முன்னோடி பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, ஷாம்ஸ்-உல்-உலேமா (அறிஞர்களின் சூரியன்) என்றும் அழைக்கப்படும் சையத் மும்தாஜ் அலி (1860 – 1935) என்பவரின் மகன் ஆவார்.[2][3] அவரது தாயார் அவருக்கு 'மேரா தாஜ்' (என் கிரீடம்) என்றப் புனைபெயர் சூட்டினார். 1857 டெல்லியில் நடந்த கிளர்ச்சியைத் தொடர்ந்து அவரது முன்னோர்கள் லாகூருக்குச் சென்று குடியேறியனர். [4] இம்தியாஸ் எழுதத் தொடங்கியபோது, அவர் "தாஜ்" என்ற பெயரில் எழுதினார். அவரது மாணவப் பருவத்தில், அவர் பல ஆங்கில நாடகங்களை மொழிபெயர்த்து இயக்கியதால் அவரது இலக்கியத் திறன் மேம்பட்டது, சில சமயங்களில் பெண்கள் நடிக்கத் தயங்கிய நேரத்தில் பெண் வேடங்களில் இவரே நடித்தார்.[5] லாகூரில் படித்த பிறகு, அவர் முதலில் தனது தந்தையின் தார்-உல்-இஷாத் பஞ்சாப் என்ற பதிப்பகத்தில் பணிபுரிந்தார் .

1909 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி தனது தந்தையால் நிறுவப்பட்ட ஃபூல் என்ற குழந்தைகள் பத்திரிகை மற்றும் மகளிர் பத்திரிகையான தஹ்ஸீப்-இ-நிஸ்வான் ஆகியவற்றில் பங்களித்தார். அவர் குலாம் அப்பாஸ் அகமது மற்றும் அகமது நதீம் காஸ்மி ஆகியோருடன் இணைந்து ஃபூல் பத்திரிக்கையில் எழுதினார்.[2][3][5] இவர் மவுலானா அப்துல் மஜீத் சாலிக்குடன் இணைந்து 'கெகாஷன்' என்ற இலக்கிய இதழின் இணை நிறுவனராக இருந்தார்.

ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் பலவற்றை உருது மொழியில் மொழிபெயர்த்துள்ளார். எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம் என்ற நாடகத்தை சவன் ரெய்ன் கா சப்னா என்று மொழிபெயர்த்ததும் அதில் அடங்கும். அவர் பல நாடகங்களையும் எழுதியுள்ளார், அவற்றில் குறிப்பிடத்தக்கவை அனார்கலி மற்றும் சாச்சா சக்கன், அவை இன்றும் தொடர்ந்து நிகழ்த்தப்படுகின்றன.

அவரது நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள்

தொகு

1922 இல் எழுதப்பட்ட அனார்கலி, (அதாவது: மாதுளை மொட்டு " [6] ) இது புராணம் சார்ந்த புராணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு காதல் நாடகம் ஆகும். இளவரசர் சலீமைக் காதலிக்கும் அனார்கலி (ஒரு விலைமகள்) என்ற அழகான அடிமைப் பெண்ணின் கதையை இது சொல்கிறது, ஆனால் இந்தக் காதல் இறுதியில் அவரது துயர மரணத்திற்கு வழிவகுக்கிறது. ஒரு இளம் பெண்ணான அனார்கலி (இயற்பெயர் நாதிரா பேகம் அல்லது ஷார்ப்-உன்-நிசா) ஈரானில் இருந்து ஒரு வணிகரின் வாகனத்தில் லாகூருக்கு வருகிறார்.[7] முகலாய பேரரசர் அக்பரால் அவர் 'அனார்கலி' (மாதுளை மொட்டு) என்ற பட்டத்தை பெறுகிறார். இந்தப் பெண்ணுடன் காதல் கொண்டதாகக் கூறப்படும் பேரரசர் ஜஹாங்கிர் (பேரரசர் அக்பரின் மகனும் வாரிசுமாவார்) தனது சுயசரிதை துஸ்க்-இ-ஜஹாங்கிரியில் ஒருபோதும் குறிப்பிடவில்லை என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அந்தக் காலத்தின் வேறு எந்த வரலாற்றாசிரியரும் அவர்களது காதல் சரித்திரத்தைக் குறிப்பிடவில்லை. அந்த நேரத்தில், ஆதிக்கம் செலுத்திய பேரரசர் அக்பர் குறித்த அச்சத்தின் காரணமாக, அந்தக் கால வரலாற்றாசிரியர்கள் யாரும் இந்த விஷயத்தை பதிவு செய்யாமல் போயிருக்கலாம். ஆயினும்கூட இந்த துயரமான காதல் கதை பொது மக்களிடையே நீடித்தது மற்றும் உயிருடன் இருந்தது. மேலும் ஒரு பிரபலமான நாட்டுப்புற கதையாக இது மாறியது

பின்னர் இதை மனதில் வைத்து இம்தியாஸ் அலி தாஜ் எழுதிய புதினமான அனார்கலி 1922 இல் வெளியிடப்பட்டது [1] இது "உருது நாடகத்தின் சரித்திரத்தில் ஒரு மைல்கல்" என்று கூறப்படுகிறது. இது உருது இலக்கியத்திலும் சோகமான காதல் கதையை அழிவற்றதாக்கியுள்ளது. அவர் இந்த நாடகத்தை 1930 ஆம் ஆண்டில் மாற்றியமைத்தார். 1931 ஆம் ஆண்டில் பிரபலமான "நவீன உரைநடை வகைகளில்" மறுபதிப்பு செய்யப்பட்டது. இந்தியா மற்றும் பாக்கித்தானில் பலத் திரைப்படங்கள் இதைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.[8]

இறப்பு

தொகு

1970 ஏப்ரல் 19, அன்று, இம்தியாஸ் அலி தாஜ் தனது படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத ஒரு சிலரால் கொலை செய்யப்பட்டார். அவரை மீட்க முயன்றபோது அவரது மனைவி ஹிஜாப் இமிட்டியாஸ் அலி பலத்த காயமடைந்தார்.[2][3]

இவரது மனைவி ஹிஜாப் இம்தியாஸ் அலி (1908-1999) அவர் ஒரு பிரபலமான உருது கவிஞர் மற்றும் எழுத்தாளர் மட்டுமல்ல, 1936 இல் இந்தியாவின் முதல் பெண் விமானி என்ற பெருமையும் பெற்றார்.[9]

வெளியீடுகள்

தொகு

தாஜின் பல படைப்புகளில், "100 க்கும் மேற்பட்ட புத்தகங்கள்" என மதிப்பிடப்பட்டுள்ளது,[10]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Imtiaz Ali Taj (Urdu Dramatist, author of "Anarkali" novel)". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 25 June 2019.
  2. 2.0 2.1 2.2 2.3 Legendary dramatist Imtiaz Ali Taj's death anniversary today Samaa TV News website, Published 19 April 2011, Retrieved 25 June 2019
  3. 3.0 3.1 3.2 "Imtiaz Ali, the Taj of Urdu drama". Dawn (newspaper). 14 April 2009. http://archives.dawn.com/archives/103947. பார்த்த நாள்: 25 June 2019. 
  4. Sidhwa 2005.
  5. 5.0 5.1 "Legendary writer Imtiaz Ali Taj remembered - Baluchistan Times (newspaper)". The Free Library. 20 April 2011. http://www.thefreelibrary.com/Legendary+writer+Imtiaz+Ali+Taj+remembered.-a0254438546. பார்த்த நாள்: 25 June 2019. 
  6. Khan 2006.
  7. "Legend: Anarkali: myth, mystery and history" Dawn (newspaper), Published 11 February 2012, Retrieved 25 June 2019
  8. Désoulières, Alain (2007). "Historical Fiction and Style: The Case of Anarkali". The Annual of Urdu Studies 22: 67–98. http://urdustudies.com/pdf/22/08DesoulieresAnarkali.pdf. 
  9. Hari Narain Verma, Amrit Verma, Indian Women Through the Ages, Great Indian Publishers (1976), p. 58
  10. The Pakistan Review, volume 19 (1971), p. 37

நூற்பட்டியல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்தியாஸ்_அலி_தாஜ்&oldid=3644581" இலிருந்து மீள்விக்கப்பட்டது