இம்பாபா பாலம்
இம்பாபா பாலம் (Imbaba Bridge) எகிப்து நாட்டின் கெய்ரோ நகரத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய இரயில்வே பாலமாகும். நைல்நதியின் குறுக்கே இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. அசுவான் அணையிலிருந்து 935 கிலோமீட்டர்கள் (581 மைல்) கீழ்நோக்கி அமைந்துள்ளது.[1] இம்பாபா பாலம் மட்டுமே தற்போது கெய்ரோவில் நைல் நதியின் குறுக்கே உள்ள ஒரே இரயில்வே பாலமாகும்.[2] பாலத்தின் தற்போதைய பதிப்பு 1912 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பெல்சிய நிறுவனமான பாம்-மார்பென்ட் என்ற நிறுவனத்தால் கட்டப்பட்டது.[3] பாலத்தின் முதல் கட்டுமானம் 1891 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. கிசா இரயில் நிலையத்தை நோக்கி மேற்கே நைல் நதியைக் கடக்கும் வகையில் இந்த இரயில்வே பாலம் வடிவமைக்கப்பட்டது. [2][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sadek, Nahla. Flood Effects on Local Scour at Imbaba Bridge.
- ↑ 2.0 2.1 Travel Cairo, Egypt. Boston: MobileReference.com. 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1605010557.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Ramadan, Ahmed (12 November 2010). "Streets of Cairo: The bridges over troubled water". Egypt Independent. http://www.egyptindependent.com/news/streets-cairo-bridges-over-troubled-water. பார்த்த நாள்: 9 March 2014.
- ↑ "Old Imbaba Bridge, 1890". Cairobserver. பார்க்கப்பட்ட நாள் 9 March 2014.