இயக்கம் தூண்டப்பட்ட பார்வையின்மை

இயக்கம் தூண்டப்பட்ட பார்வையின்மை (Motion Induced Blindness) என்பது செயன்முறை கூடத்தில் நோக்கப்படும் ஒரு காட்சி மறைவு அல்லது பார்வைப் புலனுணர்வுப் போலித்தோற்ற நிகழ்வு ஆகும். ஒரு பார்வையாளர் கண்களுக்கு நகரும் அல்லது இயங்கும் பிற்புறத் தோற்றத்தின் பின்னணியில் நிலையான பார்வைத் தூண்டல்கள் மறைந்து போவது இந்நிகழ்வில் நடைபெறுகின்றது.

இந்தச் செயல் விளக்கத்தில் நடுவில் சிமிட்டிக்கொண்டு இருக்கும் பச்சைப் புள்ளியில் குறைந்தபட்சம் பத்து செக்கன்களுக்குப் பார்வையைக் குவித்திருக்கவேண்டும். பத்து செக்கன்களின் பிற்பாடு, கற்பனை முக்கோணப் புள்ளிகளின் மூலையில் நிலையாக அமைந்துள்ள மூன்று மஞ்சள் புள்ளிகள் தோன்றி மறைவதைக் காணலாம். இதில் மூன்றும் ஒரே சமயத்தில் மறையலாம் அல்லது இரண்டு புள்ளிகள் மறையலாம் அல்லது ஒரு புள்ளி மட்டுமே மறையலாம். நடுவில் இருக்கும் பச்சைப் புள்ளியைத் தொடர்ச்சியாக உற்றுநோக்குபவருக்கு மஞ்சள் புள்ளிகள் ஒரு எழுந்தமானமாக மறைந்து மீண்டும் தோற்றமளிக்கும்.

மேலோட்டம்

தொகு

இயக்கம் தூண்டப்பட்ட பார்வையின்மை முதன்முதலில் 1991 ஆம் ஆண்டில் ராமச்சந்திரன் மற்றும் கிரிகோரி என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.[1] ஆனால் போனே, கூபெர்மான், சாகி ஆகியோர் 2001இல் மீண்டும் வெளிக்கொண்டு வந்ததை அடுத்து இதற்கு முக்கியத்துவமும் பெயரும் வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Ramachandran, V. S.; Gregory, R. L. (25 April 1991). "Perceptual filling in of artificially induced scotomas in human vision". Nature (Nature Publishing Group) 350: 699-702. doi:10.1038/350699a0. http://www.nature.com/nature/journal/v350/n6320/abs/350699a0.html. பார்த்த நாள்: 8 June 2013.