இயந்திரமயமாக்கம்

இயந்திரமயமாக்கம் என்பது, மனித உடலுழைப்புக்கும் விலங்குகளுக்கும் பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். தொழிலாளருக்கு அவர்களது வேலையில் உதவுவதற்கான இயந்திரங்களின் பயன்பாடும் இதற்குள் அடங்கும். ஆனால் கைக்கருவிகளின் பயன்பாடு இயந்திர மயமாக்கத்துள் அடங்குவதில்லை.

இச்சொல் பெரும்பாலும் தொழில் துறையிலேயே பயன்படுத்தப்படுகின்றது. நீராவி ஆற்றலில் இயங்கும் லேத் இயந்திரத்தின் அறிமுகம், பல்வேறு வேலைகளைச் செய்வதற்கான நேரத்தைப் பெருமளவு குறைத்ததுடன், உற்பத்தியையும் அதிகரித்தது.

பெருமளவு மனித வளத்தையும், அதிகரித்துவரும் வேலையின்மைப் பிரச்சினையையும் கொண்ட வளரும் நாடுகளில் இயந்திரமயமாக்கம் பெரும்பாலும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. இயந்திரங்கள், மனித உடலுழைப்பை மாற்றீடு செய்வதால் பலர் வேலை இழக்கும் நிலை ஏற்படும் எனப் பலர் நம்புகிறார்கள். இதனால் வேலையின்மைப் பிரச்சினை சிக்கலடையும் என்பது அவர்கள் கருத்து. இதனால் வளரும் நாடுகளின் அரசுகள் இயந்திரமயமாக்கத்தை அதிகம் ஊக்கப்படுத்துவதில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயந்திரமயமாக்கம்&oldid=2801832" இலிருந்து மீள்விக்கப்பட்டது