இயர்லேண்டைட்டு

கரிமக் கனிமம்

இயர்லேண்டைட்டு (Earlandite) என்பது [Ca3(C6H5O7)2(H2O)2]·2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கால்சியம் சிட்ரேட்டு டெட்ராயைதரேட்டு என்ற கனிம வகையாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. முதன்முதலில் 1936 ஆம் ஆண்டு இயர்லேண்டைட்டு கண்டறியப்பட்டது. எடின்பர்க் இராயல் கழகத்தின் உறுப்பினரான நூண்ணோக்கி வல்லுநர் ஆர்த்தர் இயர்லேன்டு கண்டுபிடித்த காரணத்தால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. இயர்லேன்ட்டைட்டு 1 மி.மீ அளவு கொண்ட அபரிமிதமான புடைப்பு முடிச்சுகளாக அண்டார்ட்டிக்கா பகுதியின் வெத்தெல் கடல் பகுதியில் காணப்படுகிறது[3]. இதன் படிகச் சீர்மை முதலில் செஞ்சாய்சதுரம் என்று வரையறுக்கப்பட்டு பினார் ஒற்றைச்சரிவச்சு என மாற்றப்பட்டு இறுதியாக முச்சரிவச்சு என முடிவு காணப்பட்டது[1] .

இயர்லேண்டைட்டு
Earlandite
பொதுவானாவை
வகைகரிமக் கனிமம்
வேதி வாய்பாடு[Ca3(C6H5O7)2(H2O)2]•2H2O
இனங்காணல்
நிறம்வெண்மை, வெளிர் மஞ்சள்
படிக இயல்புமுடிச்சுகள்
படிக அமைப்புமுச்சரிவச்சு
அறியப்படாத இடக்குழு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி1.80–1.95 (அளக்கப்பட்டது), 2.00 (கணக்கிடப்பட்டது)
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 1.515
nβ = 1.530
nγ = 1.580
இரட்டை ஒளிவிலகல்δ = 0.065
2V கோணம்60°
கரைதிறன்கரையாது
மேற்கோள்கள்[1][2][3][4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Herdtweck, Eberhardt; Kornprobst, Tobias; Sieber, Roland; Straver, Leo; Plank, Johann (2011). "படிகக் கட்டமைப்பு, டிரை-கால்சியம் டை-சிட்ரேட்டு டெட்ரா- ஐதரேட்டின் தயாரிப்பும் பண்புகளும் [Ca3(C6H5O7)2(H2O)2]•2H2O". Z. Anorg. Allg. Chem. 637 (6): 655–659. doi:10.1002/zaac.201100088. 
  2. Earlandite. Mindat.org
  3. 3.0 3.1 "Earlandite" (PDF). Handbook of Mineralogy. V (Borates, Carbonates, Sulfates). Chantilly, VA, US: Mineralogical Society of America. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0962209740. http://rruff.info/doclib/hom/earlandite.pdf. 
  4. Earlandite. Webmineral
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயர்லேண்டைட்டு&oldid=2732331" இலிருந்து மீள்விக்கப்பட்டது