இயற்கை ஆற்றல் தொழில் நுட்பம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
புதுப்பிக்கப்படக்கூடிய ஆற்றலான இயற்கை ஆற்றல் மாற்றத் தொழில் நுட்பத்தை (Energy technology) உலகநாடுகள் தற்போது பெரிதும் நாட ஆரம்பித்திருக்கின்றன.அவற்றில் முக்கியமாக சூரிய பலகைகள்/ஒளிமின் பலகைகள் மற்றும் காற்றாலைகளும் கணிசமான உற்பத்தி செய்கின்றன.இவை அனைத்தும் முற்றிலும் நமது காலநிலையுடன் தொடர்புடையதால் இவற்றை இடமறிந்து அமைத்தால் மட்டுமே அவை நல்ல பலனைத் தரும்.
சூரிய மின்பலகைத் தோட்டங்களைக் காட்டிலும் காற்றாலைகள் அதிகளவில் இந்தியாவில் அமைக்கப்பட்டிருக்கின்றன.அதிலும் குறிப்பாக தமிழகம் முன்னிலை வகிக்கிறது.அதிவேகமாக வளர்ந்து வரும் இதன் பயன்பாடு எதிர்காலத்தில் கணிசமான அளவு மின் உற்பத்தியில் பங்கு வகிக்கும் என்பது திண்ணம்.காற்றாலைகளை சரியான இடங்களில் இந்தியா முழுதும் அமைத்தால் கிட்டத்தட்ட 20% மின் தேவையை இதன் மூலம் பூர்த்தி செய்ய முடியும்.காற்றலை மட்டுமின்றி இதே தத்துவத்தில் நீராலைகளும் கடலில் அமைக்க இயலும்.
சூரிய பலகைகளைப் பற்றி பார்த்தோமேயானால் இந்திய காலநிலைக்கு மிகவும் உகந்த ஒன்று.இந்தியா முழுதும் விழும் சூரிய ஒளியைக் கொண்டு நமது மொத்த மின் தேவையைவிட ஆயிரம் மடங்கு அதிகம் உற்பத்தி செய்யமுடியும் என கணக்கிடப்படுகிறது.ஆனால் நமது மொத்த மின் தேவையில் 1% மே இன்று சூரிய பலகைகளைக்கொண்டு தயாரிக்கப்படுகின்றான.மேற்கத்திய குளிர்வலய நாடுகள் நாளொன்றுக்கு செறிவுடன் பெரும் வெயில் 4 மணிநேரமே இருந்தபோதிலும் தங்களின் மின்தேவையின் 5-10 சதம் சூரிய ஆற்றலைக் கொண்டு பெறுகின்றன.இந்திய அரசு தார் பாலை மற்றும் பல தரிசு நிலங்களில் மிகப்பெரிய அளவிலான மின்பலகைத் தோட்டங்களை அமைக்க திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்ககது.இருந்தபோதிலும் இவை இன்னும் முடுக்குவிக்கப்படவில்லை.
உலக நாடுகள் இதனை இரண்டு வகையில் பயன்படுத்துகின்றன.ஒன்று நடுநிலைப் படுத்தப்பட்டமுறை அல்லது மண்டலப்படுத்தப்பட்ட முறை(Centralized Method)மற்றொன்று வீட்டிலேயே அல்லது தேவைப்படும் இடத்திலேயே(Decentralized Method) அமைத்தல்.சீனா முதலிய நாடுகள் பெரிய அளவில் கடல் மேல் அமைக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளன.காரணம் இடம் மட்டுமின்றி ஒளியின் செறிவு இங்கே அதிகம்.தீபகற்ப நிலப்பரப்பைக் கொண்ட நமக்கு இது சாத்தியப்படக் கூடிய ஒன்றே.மேலும் நம் கிராமப்புறங்களில் பல ஏக்கர் கணக்கில் உள்ள எண்ணற்ற ஏரிகளில் அவற்றில் மிதக்கும் வண்ணம் அல்லது நீர்மட்டத்திற்கு மேலே அமைத்தால் அந்தந்த கிராமத்தின் மின்தேவையை அது சரிகட்டும் என எண்ணுகிறேன்.இதற்கு மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும்.இந்த மின்பலகைகளை அரசே தயாரித்து மானிய விலைகளில்(அல்லது டிவி,மிக்சி,கிரைண்டருக்குப் பதிலாக!) குடிமக்களுக்கு வழங்க வேண்டும்.இதன் மூலம் பல ஆண்டுகளுக்கு நாம் மின் விடுதலை பெற முடியும்.அத்தோடு இதனை முறையாக நாம் அணுக ஆரம்பித்தல் பல லட்சம் வேலை வாய்ப்புகளை இதன் மூலம் கண்டிப்பாக உருவாக்க முடியும்.மேலும் இதனை வீட்டுத் தேவைக்காக பயன்படுத்த எண்ணுபவர்கள் நேரடியே இவற்றை கடைகளில் வாங்கினால் மிக அதிக விலை கொடுக்க வேண்டும்.இதனுடைய முக்கிய பகுதிப் பொருளான சூரிய கலங்களை(Solar Cells) மட்டும் வெளியே வாங்கி நாமே இந்தப் பலகையை கோர்த்துக் கொள்ள முடியும்.