இயற்பிய உயிர் வேதியியல்

இயற்பிய உயிர் வேதியியல் (Physical biochemistry) உயிர் வேதியியலின் ஒரு கிளையாகும். உயிர் அணுக்களின் இயற்பிய வேதியியலைப் படிக்கப் பயன்படுத்தப்படும் கோட்பாடு, நுட்பங்கள் மற்றும் வழிமுறைகளை இத்துறை கையாளுகிறது. [1]

உயிர்வேதியியல் எதிர்வினைப் பகுப்பாய்வு மற்றும் உயிரியல் அமைப்புகளின் மாதிரியாக்கல் போன்ற செயல்பாடுகளில் கணித அணுகுமுறைகளையும் இத்துறை பயன்படுத்துகிறது. பெருமூலக்கூறுகளின் கட்டமைப்பைப் பற்றிய நுண்ணறிவை இயற்பிய உயிர் வேதியியல் துறை வழங்குகிறது, மேலும் வேதியியல் கட்டமைப்புகள் ஓர் உயிரியல் பொருளின் இயற்பியல் பண்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் இத்துறை ஆய்வுகளில் கண்டறிய இயலும். [2]

இயற்பியல் உயிர் வேதியியல் துறை உயிரியல் அமைப்புகளின் ஆய்வுக்கு இயற்பியல் மற்றும் இயற்பியல் வேதியியல் கருத்தாக்கங்களைப் பயன்படுத்துகிறது. ஓர் உயிர் இயற்பியல் வேதியியலாளர் பொதுவாக வேதி வினையின் வீதத்தை ஆய்வு செய்ய, கதிர்வீச்சுடன் மூலக்கூறுகள் கொண்டுள்ள தொடர்பை ஆய்வு செய்ய, கட்டமைப்புகள் மற்றும் பண்புகளை கணக்கிட்டு உயிரியல் அமைப்பை மதிப்பாய்வு செய்ய இயற்பியல் வேதியியலில் பயன்படுத்தப்படும் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. David Freifelder (15 August 1982). Physical Biochemistry: Applications to Biochemistry and Molecular Biology. W. H. Freeman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7167-1444-6.
  2. David Sheehan (30 April 2013). Physical Biochemistry: Principles and Applications. John Wiley & Sons. pp. 10–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-68748-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்பிய_உயிர்_வேதியியல்&oldid=3171963" இலிருந்து மீள்விக்கப்பட்டது