இயல்
(இயற்றமிழ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முத்தமிழில் [1] இயற்றமிழ். இயல் என்னும் தமிழ். இயல்பாகப் பேசப்படுவதும் எழுதப்படுவதுமாகிய தமிழை இயல் என்கிறோம்.
தொல்காப்பியப் பாயிரமானது தொல்காப்பியத்தை மொழிப்புலம் என்று குறிப்பிடுகிறது. மொழிப்புலத்தில் பேசப்படும் வழக்கும், எழுதப்படும் செய்யுளும் அடக்கம் என்கிறது. இந்தப் புலத்தில் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று படிநிலைகள் உள்ளன.
இவற்றைச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம் என அது குறிப்பிடுகிறது. செந்தமிழ் இயற்கை என்பது இயல்.