இயான் ஸ்டீவன்சன்

இயான் ஸ்டீவன்சன் எம்.டி. (Ian Stevenson) (அக்டோபர் 31, 1918 - பிப்ரவரி 8, 2007) கனடாவைச் சேர்ந்த உயிர் வேதியியலாளர் மற்றும் மனநோயியல் பேராசிரியர் ஆவார். தன்னுடைய மறுபிறவி குறித்த அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகளுக்காக இவர் பெரிதும் அறியப்படுகிறார். 2002 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெறும் வரை அவர் விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் இயல்பு கடந்தவை குறித்து ஆராயும் உணரியல் அறிவியல் (Division of Perceptual Studies) பிரிவின் தலைவராக இருந்தார். [1]

இயான் ஸ்டீவன்சன்
பிறப்பு(1918-10-31)அக்டோபர் 31, 1918
மாண்ட்ரியல், கனடா
இறப்புபெப்ரவரி 8, 2007(2007-02-08) (அகவை 88)
விர்ஜினியா
துறைஉயிர்வேதியியல், மனநோயியல், parapsychology
பணியிடங்கள்விர்ஜினியா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்புனித ஆண்ட்ரு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுமறுபிறவி குறித்த ஆராய்ச்சி
தாக்கம் 
செலுத்தியோர்
உள்ள உடல மருத்துவம்
பின்பற்றுவோர்புருசு கிரேசன்,ஜிம். பி. டக்கர், Satwant Pasricha, காரல் பௌமேன்

மறுபிறவி ஆராய்ச்சி

தொகு

மறுபிறவிக் கோட்பாடானது நவீன மருத்துவத்தில் மரபியல், மனித நடத்தை பற்றி மேலும் அறிய உதவும் என ஸ்டீவன்சன் நம்பினார். [2] 40 ஆண்டு காலம் அவர் உலகின் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து மறுபிறவியோடு தொடர்புடைய 3000 குழந்தைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்தியாவுக்கு வந்து ஆய்வு செய்ததில் மறுபிறவி நினைவுள்ள குழந்தைகள் பலர் இருப்பதை இயான் கண்டார்.

பிறவிக்குறைபாடுகளும் முற்பிறவிக் காயங்களும்

தொகு

மனிதரில் காணப்படும் பிறவிக்குறைபாடு மற்றும் பிறவிக்குறிகளுள் 35 விழுக்காடு முற்பிறவியில் அந்த மனிதனுக்கு ஏற்பட்ட காயங்களோடு தொடர்புடையவையாய் இருப்பதைக் கண்டார். நாற்பதுக்கும் மேற்பட்ட நபர்களில் பழைய மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்ததில் இயானின் ஆய்வு உண்மையென நிறுவப்பட்டது.[3]

குழந்தைப் பருவ முன்பிறவி நினைவுகள்

தொகு

முன்பிறவி நினைவுகள் குழந்தைப் பருவத்திலேயே பெரும்பாலும் ஏற்படுகின்றன என்று இயான் கண்டார். இரண்டு முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகள் தங்கள் முன்பிறவி நினைவுகளை நன்கு நினைவு கூர்வதையும் அக்குழந்தைகளின் பேச்சு மற்றும் நடத்தை வயது மற்றும் அவற்றின் குடும்பத்திற்கு ஒவ்வாததாயும் ஆனால் அக்குழந்தையும் முன்பிறப்போடு ஒத்துப் போவதையும் இயான் கண்டார். நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகள் இவற்றை மறந்து விடுவதையும் இயான் கண்டார்.[4]

பூட்டப்பட்ட பேழை

தொகு

இயான் பல்கலைக்கழகத்தில் உள்ள தனது துறை அலுவலகத்தில் பேழை ஒன்றைப் பூட்டினார். இப்பூட்டைத் திறப்பதற்கான வழி அவருக்கு மட்டுமே தெரியும். தான் இறந்த பின் ஏதேனும் ஒரு வகையில் ‌தொடர்பு கொண்டு அப்பூட்டைத் திறக்க முடியுமென அவர் நம்பினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Fox, Margalit. Ian Stevenson Dies at 88; Studied Claims of Past Lives, The New York Times, February 18, 2007.
  2. Stevenson, I (1977). "The explanatory value of the idea of reincarnation". The Journal of nervous and mental disease 164 (5): 305–26. doi:10.1097/00005053-197705000-00002. பப்மெட்:864444. 
  3. Jane Henry (2005). Parapsychology: Research on Exceptional Experiences Routledge, p. 224.
  4. Jane Henry (2005). Parapsychology: Research on Exceptional Experiences Routledge, p. 225.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயான்_ஸ்டீவன்சன்&oldid=3109410" இலிருந்து மீள்விக்கப்பட்டது