இயூலியா ரைசு
இயூலியா எலிசபெத் ரைசு (Julia Elizabeth Rice) என்பவர் பிரித்தானிய -அமெரிக்க கணக்கீட்டு வேதியியலாளர் ஆவார். இவர் கலிபோர்னியாவின் சான் இயோசு நகரில் உள்ள ஐ. பி. எம். ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிகிறார். கரிம மூலக்கூறுகளின் உருவகப்படுத்துதலில் நேரியல் அல்லாத ஒளியியல் பற்றிய ஆய்வு, குவாண்டம் வேதியியலுக்கான முல்லிகன் மென்பொருள் தொகுப்பின் வளர்ச்சி, அறிவியல் தரவு மேலாண்மை மற்றும் புள்ளிவிவர இயக்கவியலுடனான இணைப்புகள் ஆகியவை இவரது பணிகளில் அடங்கும்.[1]:{{{3}}}
கல்வி மற்றும் தொழில்
தொகுஇயூலியா ரைசு 1960 ஆம் ஆண்டு சூலை மாதம் 10 ஆம் தேதியன்று இங்கிலாந்தின் கேம்பிரிட்ச்சில் பிறந்தார். 1981 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகத்தின் இராயல் ஆலோவேயில் இருந்து கணிதம் மற்றும் வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். மார்ட்டின் ஆலோவே பரிசையும் வென்றார். 1985 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தில் நிக்கோலசு சி. ஏண்டி மேற்பார்வையில் கோட்பாட்டு வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[2]:{{{3}}}
பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் என்றி எஃப். சேஃபர் உடன் முதுகலை ஆராய்ச்சிப் படிப்பிற்குப் பிறகு, கேம்பிரிட்ச்சு நியூன்காம் கல்லூரியில் ஓர் ஆண்டு ஆராய்ச்சியாளராக இருந்த இவர் 1988 ஆம் ஆண்டில் ஐபிஎம் ஆராய்ச்சியில் சேர்ந்தார்.[2]:{{{3}}}
அங்கீகாரம்
தொகு2001 ஆம் ஆண்டில் இயூலியா ரைசு அமெரிக்க இயற்பியல் சங்கத்தின் உறுப்பினராக பெயரிடப்பட்டார். இவ்வமைப்பின் கணக்கீட்டு இயற்பியல் பிரிவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட பின்னர், "எலக்ட்ரான் தொடர்புடன் பகுப்பாய்வு வழித்தோன்றல் முறைக்கான திறமையான வழிமுறைகளை உருவாக்குவதற்கும், துல்லியத்துடன் அதிர்வெண் சார்ந்த துருவமுனைப்புகளைக் கணக்கிடுவதற்கும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.[3]:{{{3}}} 2003 ஆம் ஆண்டில் ஐபிஎம் தொழில்நுட்ப அகாதமியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் குவாண்டம் மூலக்கூறு அறிவியலின் சர்வதேச அகாடமியின் உறுப்பினராகவும் உள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Julia E. Rice", Researchers, IBM Research, பார்க்கப்பட்ட நாள் 2021-12-17
- ↑ 2.0 2.1 "Julia Rice", Members, International Academy of Quantum Molecular Science, பார்க்கப்பட்ட நாள் 2021-12-17
- ↑ "Fellows nominated in 2001 by the Division of Computational Physics", APS Fellows archive, American Physical Society, பார்க்கப்பட்ட நாள் 2021-12-17
வெளி இணைப்புகள்
தொகு- [1] Julia Rice குறியிடப்பட்ட வெளியீடுகள் கூகுள் அறிஞர்