இயேசு, யூதர்களின் அரசர்

இயேசு, யூதர்களின் அரசர் என்ற தலைப்பு இயேசுவின் வாழ்வின் ஆரம்பத்திலும் முடிவிலும் குறிப்பிடப்பட்டுவதனை புதிய ஏற்பாட்டில் காணலாம்.

இயேசு, யூதர்களின் அரசர் என்பதன் மூன்று மொழிகளின் சுருக்கம்

புதிய ஏற்பாட்டில் இத்தலைப்பின் பயன்பாடு வியத்தகு முடிவுகளுக்கு இட்டுச் சென்றுள்ளது. மத்தேயு நற்செய்தி குறிப்பிடும் இயேசுவின் பிறப்பில், கிழக்கில் இருந்து வந்த ஞானிகள் இயேசுவை "யூதர்களின் அரசர்" என்று குறிப்பிட்டதால், ஏரோது அரசன் குழந்தைகள் படுகொலைக்கு உத்தரவிட்டார். நான்கு நற்செய்திகளின் முடிவிலும் குறிப்பிடப்படும் இயேசுவின் பாடுகளின் விபரிப்பில், "யூதர்களின் அரசர்" என்ற தலைப்பு இயேசுவின் சாவுக்கு வழிவகுக்கிறது.[1][2]

"இயேசு, யூதர்களின் அரசர்" என்பது "INRI" (இலத்தீன்: Iēsus Nazarēnus, Rēx Iūdaeōrum) என இலத்தின் எழுத்துக்களின் சுருக்கமாக பயன்படுத்தப்படுகின்றது. இதனை மொழிபெயர்க்கும்போது, "நசரேனாகிய இயேசு, யூதர்களின் அரசர்" என வழங்கப்படும். இது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மூன்று மொழிகளில் இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது எழுதப்பட்டதாக யோவான் நற்செய்தி (19:20) குறிப்பிடுகிறது. கிரேக்கத்தில் இது "ΙΝΒΙ" (Ἰησοῦς ὁ Ναζωραῖος ὁ Bασιλεὺς τῶν Ἰουδαίων) எனக் குறிப்பிடப்படுகின்றது.[3]

புதிய ஏற்பாட்டில், "யூதர்களின் அரசர்” என்ற தலைப்பு யூதர் அல்லாதவர்களால் பயன்படுத்தப்பட்டது. அவர்கள் முறையே விவிலிய ஞானிகள், பொந்தியு பிலாத்து மற்றும் உரோமப்படைவீரர்கள். யூதத் தலைவர்கள் "இசுரேலின் அரசர்" என்பதையே பயன்படுத்தினர்.[1]

இதனையும் காண்க தொகு

உசாத்துணை தொகு

  1. 1.0 1.1 The Gospel of Matthew by R. T. France 2007 ISBN 0-8028-2501-X page 1048
  2. Studies in Early Christology by Martin Hengel 2004 ISBN 0-567-04280-4 page 46
  3. Metamorphosis: the Transfiguration in Byzantine theology and iconography by Andreas Andreopoulos 2005 ISBN 0-88141-295-3 page 26
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயேசு,_யூதர்களின்_அரசர்&oldid=2696018" இலிருந்து மீள்விக்கப்பட்டது