இரகசியப் பரிமாறல் மொழி (வணிகம்)

இரகசியப் பரிமாறல் மொழி அல்லது கைமொழி என்பது தமிழ் பேசும் மொத்த வணிகர்கள், இடைத் தரகர்கள் தமக்கிடையே பொருட்களின் பெறுமதியை இரகசியமாக பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு முறை ஆகும். இது எண்களுக்கு தமக்குள்ளே பெரிதும் புரிந்து கொள்ளும் சொற்களையும் கை சமிக்கைகளைக் கொண்டது. கைக் குட்டைக்குள் கைகளை வைத்து தமக்கிடையே சமிக்கை செய்து கொள்வர்.

இந்த மொழியை தெரியாதவர்கள் மத்தியில் பேச்சில் மட்டும் பெறுமதியைப் பரிமாறிக் கொள்ளலாம். தெரிந்தவர்களிடம் கைக்குட்டைகளுக்குள் கைச் சமிக்கைகளையும் பயன்படுத்திப் பெறுமதியைப் பரிமாறிக் கொள்வர்.

எண்கள்

தொகு
1 - க - ஆட்காட்டி விரல்
2 - உ - ஆட்காட்டி மற்றும் நடுவிரல்
3 - சூலம் - நடு மூன்று விரல்கள்
4 - கட்டில் கால் - பெருவிரல் தவிர்த்த விரல்கள்
5 - தட்டு - ஐந்து விரல்களும்
6 - தடவல் - கடசி விரலைத் தடவல்
7 - மேல் தடவல் - மோதிர விரல் தடவல்
8 - அ - நடுவிரல் தடவல்
9 - நவக்கிரகம் - ஆட்காட்டி விரல் தடவல்
10 - க பவுன் - ஆட்காட்டி விரலைப் பிடித்து பவுன் என்று சொல்லுதல்
20 - உ பவுன் - இரண்டு விரல்களைப் பிடித்து பவுன் என்று சொல்லுதல்
30 - சூலம் பவுன் - மூன்று விரல்களைப் பிடித்து பவுன் என்று சொல்லுதல்
40 - கட்டில் கால் பவுன் - நான்கு விரல்களைப் பிடித்து பவுன் என்று சொல்லுதல்
50 - தட்டு பவுன் - கையில் ஒரு விரலால் தட்டி பவுன் என்று சொல்லுதல்
60- தடவல் பவுன் - கடைசி விரலைத் தடவி பவுன் என்று சொல்லுதல்
70 - மேல் தடவல் பவுன் - மோதிர விரலைத் தடவி பவுன் என்று சொல்லுதல்
80 - அ பவுன் (ஆனாப் பவுன்) - நடுவிரலைத் விரலைத் தடவி பவுன் என்று சொல்லுதல்
90 - நவக்கிரகப் பவுன் - ஆட்காட்டி விரலைத் தடவி பவுன் என்று சொல்லுதல்
100 - அச்சு - ஆட்காட்டி விரலைப் பிடித்து அச்சு என்று சொல்லுதல்
1000 - அக்கிரம் - ஆட்காட்டி விரலைப் பிடித்து அக்கிரகம் என்று சொல்லுதல்