இரகுகுல திலகர்

இரகுகுல திலகர் (Raghukul Tilak)(சனவரி 7, 1900-திசம்பர் 25, 1989) என்பவர் இந்தியாவின் மேனாள் ஆளுநர் ஆவார்.[1]

இளமை

தொகு

இரகுகுல திலகர் சனவரி 7, 1900 அன்று உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் பிறந்தார். இவர் இளங்கலை வரலாற்று பாடத்தினை 1924 முதல் 1926 வரை பயின்றார். பின்னர் 1928 முதல் 1932 வரை குர்ஜா கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார்..

இந்திய விடுதலை போரில்

தொகு

ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்ற திலகர் 1932 முதல் 1935 வரை சிறையிலிருந்தார். சிறையிலிருந்து விடுதலையானதும், 1935 முதல் 1938 வரை காசி வித்யாபீடத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். மேலும் 1939 முதல் 1946 வரை உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதன் காரணமாக, இவர் மீண்டும் 1942 முதல் 1944 வரை சிறையிலிருந்தார்.

அரசியல்

தொகு

1944ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் நாடாளுமன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். 1952 முதல் 1958 வரை, ரயில்வே தேர்வு வாரியத்தின் வடக்கு மண்டல தலைவராகவும், 1958 முதல் 1960 வரை ராஜஸ்தான் அரசுப் பணியாளர்கள் தேர்வு கழகத்தின் உறுப்பினராகவும் இருந்தார். 1961ஆம் ஆண்டு வரை சர்வோதயா இயக்கத்தில் தீவிரமாக இருந்த இவர், திசம்பர் 1971 முதல் ஆகத்து 1974 வரை காசி வித்யாபீடத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார். ஆகத்து 1974 முதல் செப்டம்பர் 1976 வரை, காசியில் உள்ள காந்தி கல்வி நிறுவனத்தின் கெளரவப் பொருளாளராகவும், பேராசிரியராகவும் இருந்தார்.

ஆளுநராக

தொகு

மே 12, 1977 முதல் ஆகத்துட் 8, 1981 வரை ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராக இருந்தார்.[2] இந்த காலகட்டத்தில், 1977 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி வரை மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி இருந்தார்.[3]

இறப்பு

தொகு

திலகர் 25 திசம்பர் 1989 அன்று சாலை விபத்தில் இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. https://rajbhawan.rajasthan.gov.in/content/rajbhawan/en/formergovernors/shraghukultilak.html
  2. "On governors, go by reason not whim". பார்க்கப்பட்ட நாள் 9 November 2015.
  3. "राजस्थान विधान सभा". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-03-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரகுகுல_திலகர்&oldid=3402260" இலிருந்து மீள்விக்கப்பட்டது