இரகுவீர் சிங் காடியன்
இரகுவீர் சிங் காடியன் (Raghuvir Singh Kadian) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1944 ஆம் ஆண்டு சூன் மாதம் 5 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அரியானா மாநிலத்திலுள்ள பெரி சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு அரியானா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறு முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றுள்ளார்.[1]
அரியானா சட்டசபையில் மதமாற்ற எதிர்ப்பு மசோதா அறிமுகம் செய்யப்பட்ட போது எதிர்கட்சியான காங்கிரசு 2022 ஆம் ஆண்டு சட்ட விரோதமாக மதமாற்றம் தடுப்பு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான இரகுவீர் சிங் காடியன், மசோதாவின் நகலை கிழித்ததற்காகவும், இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்காததற்காகவும் சபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in.
- ↑ "Explained: Who is Dr Raghuvir Singh Kadian, the Congress MLA who tore copy of anti-conversion Bill in Haryana Assembly?". The Indian Express (in ஆங்கிலம்). 2022-03-04. பார்க்கப்பட்ட நாள் 2023-04-14.