இரஞ்சித் குமார்
இரஞ்சித் குமார் ( Ranjit Kumar) இந்திய உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற மூத்த வழக்கறிஞரும், இந்தியாவின் முன்னாள் அரசுத் தலைமை வழக்குரைஞரும் ஆவார்.[1] 1980 ஆம் ஆண்டு சட்டப் பாடத்தில் பட்டம் பெற்ற பட்டதாரியான இவர் வழக்கறிஞராக பெரும்பாலும் உச்சநீதி மன்றத்தில் 42 ஆண்டுகள் பணியாற்றி பயிற்சி பெற்றார். மோகன் பராசரனுக்குப் பிறகு 2014 ஆம் ஆண்டில் நரேந்திர மோடியின் தற்போதைய அரசாங்கத்தால் இவர் நியமிக்கப்பட்டார்.[2] இந்திய அரசு தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்படுவதற்கான அறிவிப்பு 7 சூன் 2014 அன்று சட்ட அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.[3] குடும்பத்துடன் தொடர்புடைய தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி இரஞ்சித் குமார் 20 அக்டோபர் 2017 அன்று தனது பதவியை விட்டு விலகல் செய்தார்.
2014ஆம் ஆண்டு பாரதீய சனதா ஆட்சிக்கு வந்த பிறகு அரசு தலைமை வழக்குறைஞராக நியமிக்கப்பட்ட இவர் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பல முக்கிய வழக்குகளில் இடம்பெற்று வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகளில் நடுநிலை அறிவிரையாளராகவும் செயல்பட்டார். பெங்களூரு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவர் ஆஜராகி வாதாடினார்.
2012 ஆம் ஆண்டில், இரஞ்சித் குமார் மற்றும் இரண்டு மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற பார் அமைப்பில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அச்சுறுத்தப்பட்டனர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ranjit Kumar was Solicitor General". தி இந்து. 30 May 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/ranjit-kumar-is-solicitor-general/article6063907.ece. பார்த்த நாள்: 30 May 2014.
- ↑ "Modi govt chooses Mukul Rohatgi as attorney general, Ranjit Kumar as solicitor general", Times of India, 29 May 2014. Accessed 30 May 2014
- ↑ "Ranjit Kumar appointed as Solicitor General". 8 June 2014. பார்க்கப்பட்ட நாள் 8 June 2014.
- ↑ "Supreme Court stays expulsion of three senior advocates", The Hindu, 20 January 2012. Accessed 30 May 2014