இரட்டணை நாராயணகவி

இரட்டணை நாராயணகவி (Rettanai Narayana Kavi), என்கிற முனைவர் க. அரிகிருஷ்ணன் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், நூலாசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், உரையாசிரியர், இலக்கியப்படைப்பாளர் என்ற பன்முகங்களைக் கொண்டவர். யாப்பிலக்கண ஆராய்ச்சியில் பா இனங்கள் குறித்து ஆய்வு செய்து தன் முடிவுகளைத் தந்துள்ளார். பாவினங்களை முழுமையாக கற்றுணர்ந்த காரணத்தாள் சிற்றிலக்கியத்தின்பால் ஆர்வம் கொண்டு பல்வேறு சிற்றிலக்கியங்களைப் படைத்து வருகிறார்.

இளமை

தொகு

இந்தியா, தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், இரட்டணை கிராமத்தில் கணேசன்-பார்வதி இணையருக்கு ஒரே மகனாக 24.08.1976 இல் பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரிகிருஷ்ணன் என்பதாகும். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயதில் இருந்து ஏழ்மையில் வளர்ந்தவர்.

கல்வி

தொகு

மயிலம் தமிழ் கல்லூரியில் 1996-1999 ஆம் கல்வி ஆண்டில் இளங்கலை(B.Lit) பட்டமும், வேலூர் கல்வியல் கல்லூரியில் 1999-2000 ஆம் கல்வி ஆண்டில் இளங்கலைக் கல்வியியல் (B.Ed) பட்டமும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் 2000-2002 ஆம் கல்வி ஆண்டில் கல்வி ஆண்டில் முதுகலை(M.A) மற்றும் வெண்பாவின் இனங்கள் என்னும் தலைப்பில் 2002-2003 ஆம் கல்வி ஆண்டில் ஆய்வியல் நிறைஞர்(M.Phil) பட்டங்களும், மீண்டும் மயிலம் தமிழ், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “தமிழ்ப் பாவினங்களின் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் தலைப்பில் 2014 ஆம் கல்வி ஆண்டில் முனைவர் பட்டமும்(Phd) பெற்றுள்ளார்.

பெற்ற விருதுகள்

தொகு

பல்வேறு அமைபுகளில் இணைந்து தமிழ்ப்பணி ஆற்றியதில், யாப்பின் குழவி, கலித்தொகைக் கவிஞர், குறள் ஆய்வுச் செம்மல், நம்மாழ்வார், திருக்குறள் நெறிச்செம்மல், கர்மவீரர் காமராசர், கவிச்சுடரொளி, கவியரசர் கவிச்செம்மல், நல்லாசிரியர் மாமணி, இராச கவி, ரோஜாவின் ராஜா, தமிழ்மொழிச் செம்மல், இலக்கிய இமயம், காப்பிய மாந்தர்கள், பாவவர் சுந்தர பழனியப்பன், சித்திரைக்கவி, திருக்குறள் உரைச்செம்மல், பாரதி காவலர், ஹைக்கூ செம்மல், தேசப்பற்றாளர், பைந்தமிழ் பாரதி, பாரதி பணிப்பாவலர், ஆய்வுச் செம்மல், செந்தமிழ்ச் செல்வர் முதலாக சுமார் 23 விருதுகளையும் பெற்றுத் தமிழ்த்தொண்டு ஆற்றி வருகிறார்.

ஆக்கிய நூல்கள்

தொகு

ஆகிய (30) சிற்றிலக்கியங்கள், தமிழ்ப் பாவினங்களின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற ஆராய்ச்சி நூல், பாவினச் செய்யுட்கோவை யாப்பு சான்றிலக்கிய நூல் முதலிய நூல்களை எழுதியுள்ளார்.

தொகுப்பாசிரியராக இருந்து வெளியிட்ட நூல்கள்

தொகு
  • காப்பிய மாந்தர்கள் தொகுதி 1
  • காப்பிய மாந்தர்கள் தொகுதி 2
  • பாவலர் சுந்தரபழனியப்பன் படைப்புலகம்
  • பாரதியார் நூறு பாவலர் நூறு
  • மாண்புடைய மகளிர்
  • பாரதி(தீ)
  • கவிமாலை
  • கவிமலர்கள்
  • பன்முகப் பார்வையில் கவிஞரேறு வாணிதாசன்
  • மீண்டும் பிறந்து வா! பாரதியே!!!
  • விடுதலை என்பது.
  • ஹைக்கூ கவிதைகள்
  • ஆய்வியல் அழகியல்..
  • இந்திய இலக்கியங்களில் தகவல் தொடர்பு
  • திருக்குறள் ஒரு குறள் ஓர் உரை
  • இலக்கிய வரலாறு
  • சுந்தரபழனியப்பன் படைப்புகளில் மானுடவியல் சிந்தனைகள்
  • செம்மொழி வளர்க்கும் பொங்குதமிழ்ச் சங்கம்
  • பன்முகப் பார்வையில் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
  • கலைஞர் 100
  • பன்னோக்குப் பார்வையில் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
  • தாய்மொழி (2024 கவிஞர்கள் (ம) 2024 கவிதைகளின் தொகுப்பு )
  • பன்முகப் பார்வையில் பாவலர் சுந்தரபழனியப்பன்

முதலான நூல்கள் தொகுப்பாசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. இரட்டணை நாராயணகவி
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டணை_நாராயணகவி&oldid=4096342" இலிருந்து மீள்விக்கப்பட்டது