இரட்டைக் குவிய எக்சு-கதிர் குழாய்

இரட்டைக்குவிய எக்சு-கதிர்க் குழாய் (dual focus x-ray tube) என்பது இரு குவியங்களையுடைய எக்சு-கதிர்க் குழாய்களைக் குறிக்கும். பொதுவாக இப்போதெல்லாம் விற்பனைக்கு வரும் குழாய்கள் இரு குவியங்களுடன் வருகின்றன. ஒரு சிறிய குவியமும் ஒரு பெரிய குவியமும் ஒரே குழாயில் இருக்கின்றன. தேவைக்கேற்ப குவியத்தினை தேர்ந்து எடுத்துக்கொள்ள முடியும். இதற்காக எதிர் மின்முனையில் இரு குவிக்கும் கோப்பைகளும் இரு தனித்தனி டங்சுடன் கம்பிச்சுருளும் அமைக்கப்பட்டுள்ளன. தேவையான கம்பிச் சுருளில் மின்சாரத்தினைச் செலுத்தி வெப்ப இலத்திரன்களைப் பெறமுடியும். சிறிய குவியத்தினைப் பயன்படுத்தும் போது புறநிழல் குறைந்து தெளிவான கதிர்ப் படம் கிடைக்கிறது. அதிக மின்சுமையினை ஏற்ற முடியாது. பெரிய குவியத்தினைப் பயன் கொள்ளும் போது அதிக மின்சுமையினை ஏற்ற முடிந்தாலும் படம் தெளிவற்ற விளிம்புகளுடன் காணப்படும்.

வெளி இணைப்புகள் தொகு