இரட்டை உப்பு

இரட்டை உப்புகள் (Double salts) ஒன்றுக்கு மேற்பட்ட நேர்மின் அயனிகள் அல்லது எதிர்மின் அயனிகளைப் பெற்றிருக்கும். ஒரே அயனி அணிக்கோவை மதிப்புடன் படிகமான இரண்டு வேறுபட்ட உப்புகளைச் சேர்த்து இரட்டை உப்புகள் தயாரிக்கப்படுகின்றன. பொதுவாய்ப்பாடு MIMIII[SO4]2•12H2O) என்றுள்ள படிகாரங்கள் அல்லது பொதுவாய்ப்பாடு [MI]2MII[SO4]2•6H2O) என்றுள்ள அல்லது M2M'(SeO4)2(H2O)6 தட்டோன் உப்புகள், பொட்டாசியம் சோடியம் டார்டரேட்டுகள், அம்மோனியம் இரும்பு(II) சல்பேட்டு மற்றும் புரோம்லைட்டுகள் இரட்டை உப்புக்கு உதாரணங்களாகும்.[1][2][3]

இரட்டை உப்புகள் அணைவு உப்புகளிலிருந்து வேறுபட்டனவாகும். தண்ணிரில் கரையும்பொழுது ஒரு இரட்டை உப்பு முழுவதுமாக பிரிகையடைந்து எளிய மூலக்கூறுகளாகப் பிரிந்துவிடும். ஆனால் அணைவு உப்புகளின் அயனிகள் பிரிகையடையாது. உதாரணமாக என்ற KCeF4 இரட்டை உப்பு தண்ணீரில் கரைந்து K+, Ce3+ மற்றும் F−அயனிகளாகப் பிரிகிறது. ஆனால் K4[YbI6] என்ற அனைவு உப்பு தண்ணீருடன் சேரும்போது [YbI6]4− அயனித் தொகுதியாகவே உள்ளது. எனவே அணைவு அயனிகளை வாய்ப்பாட்டில் எழுதும்போது சதுர அடைப்புக் குறிக்குள் "[ ]" எழுதப்படுவது முக்கியமாகும்.

பொதுவாக இவ்வாறு உருவாக்கப்படும் இரட்டை உப்புகளின் பண்புகள் அவற்றின் கூறுகளான தனி உப்புகளின் பண்புகளை ஒத்திருக்கும் என்று கருதமுடியாது.

மேற்கோள்கள்

தொகு
  • Chr. Balarew - Mixed Crystals and Double Salts between Metal (II) Salt Hydrates. Z. Krist. 181, 35-82 (1987).
  1. Housecroft, C. E.; Sharpe, A. G. (2008). Inorganic Chemistry (3rd ed.). Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0131755536.
  2. Balarew, Christo (1987). "Mixed crystals and double salts between metal(II) salt hydrates". Zeitschrift für Kristallographie 181 (1–4): 35–82. doi:10.1524/zkri.1987.181.1-4.35. Bibcode: 1987ZK....181...35B. 
  3. Freund, Ida (2014) [1904]. "Mitscherlich and the Connection between Crystalline Form and Chemical Composition". The Study of Chemical Composition: An Account of its Method and Historical Development with Illustrative Quotations. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. 385–453. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107690301.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_உப்பு&oldid=4133188" இலிருந்து மீள்விக்கப்பட்டது