இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்

பாண்டிய நாட்டில் இருந்த ஒரு பகுதிக்கு இரணிய முட்ட நாடு என்று பெயர் இருந்தது. இந்நாடு மதுரை அருகே நத்தம், அழகர்கோவில், ஆனைமலை, திருப்பத்தூர் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தது என கல்வெட்டுகள் கூறுகின்றன[1][2]. இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர் எனப்பட்டது. சங்ககாலத்தில் இவ்வூரில் வாழ்ந்த புலவர் பெருங்கௌசிகனார். இவர் பாடிய நூல் மலைபடுகடாம்.

இரணியமுட்டம் = நீலகிரி தொகு

பெருங்குன்றூர் என்பது ஊரின் பெயர். முட்டு என்னும் சொல் மலைமுகட்டைக் குறிக்கும் சொல்லாக இக்காலத்திலும் வழக்கத்தில் உள்ளது. இரணியம் என்பது இருள்படர்ந்த பனிமூட்டத்தைக் குறிக்கும். இருள்+ந்+இ+அம் = இருணியம் < இரணியம் என மருவுதல் தமிழ் இலக்கண-நெறி.

நீல நிறத்தை இருள்நிறமாகக் கொள்வது தொன்றுதொட்டு இருந்துவரும் மரபு. இருள்நிறம் என்பது கருநிறம். இருள்நிறக் கண்ணனை நீலமேனி நெடியோன் என்கிறோம்.

இவற்றையெல்லாம் ஒப்பிட்டு எண்ணும்போது இருள்நிற முட்டம் சங்ககாலத்தில் இரணியமுட்டம் என மருவியதையும், இருள்நிறம் நீலநிறம் எனக் கொண்ட வகையில் நீலமலை என வழங்கப்பட்டதையும், நீலமலை என்னும் தமிழ்ச்சொற்றொடர் வடமொழித் தாக்கத்தால் நீலகிரி ஆனதையும், எளிதாக, இலக்கண மரபுப்படி கண்டறிய முடிகிறது.

பெருங்குன்றூர் = குன்னூர் தொகு

குன்றூர் என்பது நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகருக்கு மேற்கே உள்ள சிற்றூர்களினை ஒருங்கிணைந்த நிலபரப்பாக சங்ககாலப் பாடல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குன்றூரில் பெரியது பெரிய குன்றூர் என்னும் இலக்கியச் சொல் குன்னூர் என்று பேச்சு வழக்கில் திரிபது இயல்பு. குன்னூர்க் குன்றம் தமிழ்நாட்டிலுள்ள குன்றங்களில் பெரிதாகையால் 'பெருங்குன்றூர்' எனப்பட்டது.

  1. கமால் Dr. எஸ்.எம். சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1993) செப்பேடு 43. பக்: 389
  2. 322 பக்கம் தமிழ்மொழி-இலக்கிய வரலாறு