இரண்டாம் துகோஜிராவ் ஓல்கர்
சர் இரண்டாம் துகோஜி ராவ் ஓல்கர் (Tukojirao Holkar II) [1] (1835 மே 5 - 1886 சூன் 17) இவர் மராட்டியர்களின் ஓல்கர் வம்சத்தைச் சேர்ந்த இந்தோரின் மகாராஜா ஆவார். இவரது பிறந்த பெயர் ஜஸ்வந்த் ஓல்கர் என்பதாகும். இவர் ஓல்கர் வம்சத்தின் இணை கிளையைச் சேர்ந்த சந்தோஜி ராவ் ஓல்கரின் மகனாவார்.
இரண்டாம் துகோஜிராவ் ஓல்கர் ஓல்கரின் பதினோராவது பகதூர், ஓல்கர் வம்சம் | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
வாழ்க்கை
தொகு1844 இல் இரண்டாம் காந்தாராவ் ஓல்கர் இறந்தபோது, முன்னாள் மகாராஜா மார்த்தண்ட் ராவ் ஓல்கர் தனக்கு அரியணையை கோரினார். ஆனால் பல பிரபுக்களின் ஆதரவுடன் அவரது கோரிக்கை ஆங்கிலேயர்களால் ஏற்கப்படவில்லை. யஷ்வந்த் ராவ் ஓல்கரின் விதவைகளில் ஒருவரான கிருட்டிணா பாய் ஓல்கர் சாகிபா, பாவோ சாந்தோஜி ஓல்கரின் இளைய மகனின் பெயரை பரிந்துரைத்தார், (மார்த்தாண்ட ராவின் மாமா). இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு, 12 வயதான ஜஸ்வந்த் ஓல்கர், இரண்டாம் துகோஜி ராவ் ஓல்கர் என்றப் பெயருடன் 1844 சூன் 23 அன்று அரியனை ஏறினார்.
அரசப்பிரதிநிதியின் கட்டுப்பாட்டில் உள்ள ஆட்சிமன்றக் குழு தொடர்ந்தது. 16 வயதில் (1848) இரண்டாம் துகோஜி ராவ் அரசாங்கத்தில் முறையாக பங்கேற்கத் தொடங்கினார். கிருட்டிணா பாய் 1849 இல் இறந்தார். துகோஜி அரச விவகாரங்களில் தனது பங்களிப்பை மேலும் விரிவுபடுத்தினார்.1852 மார்ச் 8 அன்று 20 வயதை எட்டிய பின்னர் அனைத்து அதிகாரங்களும் துகோஜிக்கு வழங்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் பல சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
குடும்பம்
தொகு1846 ஆம் ஆண்டில் இவர் மல்சா பாய் என்பவரை மணந்தார் (ருக்மா பாய் என்றும் அழைக்கப்படும் இவர், 1848 சூனில் இந்தூரில் காலராவால் இறந்தார்). இவரது மரணத்திற்குப் பிறகு, துகோஜி பாகீரதி பாய் மற்றும் இராதா பாய் ஆகியோரை மணந்தார்
இறப்பு
தொகுதுகோஜி 1886 ஆம் ஆண்டு சூன் 17 ஆம் தேதி மகேசுவர் என்ற இடத்தில் இறந்தார். இவருக்குப் பிறகு அவரது மூத்த மகன் சிவாஜிராவ் ஓல்கர் பதவிக்கு வந்தார்.
குறிப்புகள்
தொகு- ↑ Hunter, Sir William Wilson (1885). The Imperial Gazetteer of India. Londres: Trübner & co.