இரண்டாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)
இரண்டாம் போனிஃபாஸ் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 530 முதல் 532 வரை இருந்தவர்.
இரண்டாம் போனிஃபாஸ் | |
---|---|
![]() | |
ஆட்சி துவக்கம் | 530 |
ஆட்சி முடிவு | 532 |
முன்னிருந்தவர் | நான்காம் ஃபெலிக்ஸ் |
பின்வந்தவர் | இரண்டாம் யோவான் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ??? |
பிறப்பு | ??? ??? |
இறப்பு | 532 ??? |
போனிஃபாஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
இவரே முதல் ஜெர்மானிய திருத்தந்தையாவார். இவர் பிறப்பால் ஆஸ்திரோகோத் (Ostrogoths) ஆவார். கோதிக் அரசன் அதாலரிகின் தூண்டுதலால் இவருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் இவரை தேர்ந்தெடுத்தார். இவரின் ஆட்சியில் சிலகாலம் உரோமை நகர குருக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தியோஸ்குருஸ் என்ற எதிர்-திருத்தந்தை இருந்தார். போனிஃபாஸும், தியோஸ்குருஸும் 22 செப்டம்பர் 530 அன்று, திருப்பொழிவு செய்யப்பட்டனர். ஆனால், 20 நாட்களில் தியோஸ்குருஸ் இறந்தார்.
உரோமன் நாட்காட்டிதொகு
போனிஃபாஸ், யூலியின் நாட்காட்டியில் இருந்த ஆண்டுகளின் எண்ணிக்கையை அப் ஊர்பி கொண்டிட்டாவிலிருந்து அனோ டொமினிக்கு மாற்றினார்.
மேற்கோள்கள்தொகு
- "Pope Boniface II". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- At GM Arts