இரண்டாம் முஆவியா
இரண்டாம் முஆவியா (Muawiya II, அரபி:معاوية بن يزيد) முதலாம் யாசித்தின் மகனும் மூன்றாவது உமைய்யா கலீபாவும் ஆவார். தந்தையின் இறப்பிற்குப் பின் 683ல் ஆட்சியை பிடித்த இவர், மொத்தம் மூன்று மாதங்கள் நாற்பது நாட்கள் மட்டுமே ஆட்சி செய்தார். பொதுவாக இளகிய மனமும், அரசியல் ஆர்வமின்மையும் கொண்டவராக இவர் விளங்கினார். இவரின் தந்தை யாசித்தினால், அப்துல்லா இப்னு சுபைருக்கு எதிராக மெக்கா மற்றும் மதினா ஆகிய புனித நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளை திரும்பப் பெற்றார். இந்த நடவடிக்கையின் மூலம் அந்த புனித நகரங்களை தான் அவமதிக்க விரும்பவில்லை என அறிவித்தார். மேலும் உசேனின் படுகொலை, புனித நகரங்களின் மீதான தாக்குதல் போன்ற தனது தந்தையின் நடவடிக்கைகளுக்காக மனம் வருந்தி 684ல் ஆட்சியை துறந்தார். இதன் பிறகு நாற்பது நாட்கள் கழித்து மரணமடைந்தார்.
இரண்டாம் முஆவியா | |||||
---|---|---|---|---|---|
உமய்யா கலீபா | |||||
ஆட்சி | 683 – 684 | ||||
முன்னிருந்தவர் | முதலாம் யாசித் | ||||
பின்வந்தவர் | முதலாம் மர்வான் | ||||
| |||||
அரச குலம் | உமய்யா கலீபகம் | ||||
தந்தை | முதலாம் யாசித் |
முஆவியா தனது ஆட்சியில் கண்டிப்பாக இருக்க வேண்டியவை என கூறி அமல்படுத்திய மூன்று சட்டங்கள் மிகவும் முக்கியமானவை. அவை,
- பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
- எந்த ஒரு குற்றத்திற்கும், மரன தண்டனை சரியான தீர்ப்பாகாது.
- தரும நிதி அனைவருக்கும் கட்டாயமானது.
இந்த சட்டங்கள் இவரின் மறைவுக்குப் பின் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.