இரத்னா புத்தக பந்தர்

நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவிலுள்ள ஒரு புத்தக க் கடை

இரத்னா புத்தக பந்தர் (Ratna Pustak Bhandar) என்பது நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவிலுள்ள ஒரு தனியார் நூல் விநியோகஸ்தரும், வெளியீட்டாளரும் , புத்தகங்களின் சில்லறை விற்பனையாளரும் மற்றும் நேபாளத்தின் பழமையான புத்தகக் கடையும் ஆகும்.[1] இது பல்வேறு வகையில் இணைய வழியாகவும் செயல்படுகின்றன.

இரத்னா புத்தக பந்தர்
மூல நிறுவனம்இரத்னா புத்தக பந்தர்
Ratna Pustak Bhandar
நிலைமைசெயல்படுகிறது
துவங்கப்பட்டது1946
துவங்கியவர்இராம்தாசு சிரேசுதா மற்றும் இரத்னபிரசாத் சிரேசுதா
நாடுநேபாளம்
தலைமையகம்காத்மாண்டு
வெளியிடும் வகைகள்நேபாள இலக்கியம், ஆசிய ஆய்வுகள், இமயமலை ஆய்வுகள், மதம், கற்பனை, கலை, பயணக்கட்டுரை, நினைவுக் குறிப்புகள்
Fiction genresநேபாளி மற்றும் ஆங்கில இலக்கியம், பாடநூல், நாட்டுப்புறவியல், சுயசரிதை மற்றும் பல
அதிகாரப்பூர்வ இணைத்தளம்www.shopratnaonline.com

வரலாறு

தொகு

நாட்டின் மிகப் பழமையான புத்தகக் கடையான இரத்னா புத்தக பந்தர், இராம்தாசு சிரேசுதா மற்றும் இரத்னபிரசாத் சிரேசுதா ஆகியோரால் 1946 இல் நிறுவப்பட்டது. இக்கடையின் வரலாறு 1939 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. இராம்தாசு சிரேசுதா காத்மாண்டுவின் இரத்னா பூங்கா அருகிலுள்ள போடாகிடியில் இராம்தாசு அண்ட் சன்ஸ் என்ற பெயரில் ஒரு வண்டியில் பெரும்பாலும் மத ரீதியான புத்தகங்களை விற்கத் தொடங்கினார். 1946 ஆம் ஆண்டில் இவரது மூத்த மகன் இரத்னபிரசாத் சிரேசுதாவின் நினைவாக ‘இரத்னா புத்தக பந்தர்’ என்று மறுபெயரிடப்பட்டது.[1]

வெளியீடுகள்

தொகு

இரத்னபிரசாத் சிரேசுதா பகவத் தோத்திரம் என்ற தனது முதல் நூலை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து வர்ணமாலா, பஞ்ச தோத்திரம் ஆகிய புத்தகங்களை வெளியிட்டார்.

1990 இல் நேபாளம் சனநாயகத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு அரசாங்கத்தால் நடத்தப்படும் ‘சாஜா புத்தக பந்தர்’ மற்றும் தனியாருக்கு சொந்தமான ‘இரத்னா புத்தக பந்தர்’ என இரண்டு வெளியீட்டு நிறுவனங்கள் மட்டுமே இயங்கின.[2] அப்போதிருந்து இரத்னா புத்தக பந்தர் நாடு முழுவதும் வெளியிடுதல், இறக்குமதி செய்தல் மற்றும் விநியோகம் செய்தல் மூலம் மக்களுக்கு பரந்த அளவிலான புத்தகங்களை வழங்கி வருகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான பாடநூல்களும் வழங்கப்படுகின்றன.[3][4]

குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள்

தொகு

இரத்னா புத்தக பந்தர், தேசத்தின் இலக்கிய பிரமுகர்களாக இருக்கும் பல ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு தளத்தையும் வழங்கியுள்ளது. இலேக்நாத் பௌத்யால், பாலகிருஷ்ணா சாமா, சித்திச்சரண் சிரேசுதா, கேதர்மன் பைத்திட், விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா, இலைன் சிங் பாங்டெல், மதன் மணி தீட்சித், சங்கர் லமிச்சானே, இருதயா சந்திர சிங் பிரதான், மாதவ் பிரசாத் கிமிரே, சத்ய மோகன் ஜோஷி, தூஸ்வான் சயாமி, பைரவ் ஆரியால், தாரா நாத் சர்மா, கிருஷ்ண சந்திர சிங் பிரதான், அபி சுபேடி, துருபா சந்திர கௌதம், சானு சர்மா, கோவிந்த ராஜ் பட்டாராய், பத்மாவதி சிங், மாயா தாக்குரி மற்றும் நேபாள இலக்கிய உலகின் பல முக்கிய நபர்கள் இரத்னா புத்தக பந்தருடன் தொடர்புடையவர்கள்.[5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 An Introduction to Ratna Pustak Bhandar, ratnabooks.com. Retrieved 19 August 2019.
  2. Weena Pun, "Changing literature, changing country", Himal Southasian, 15 October 2012. Retrieved 19 August 2019.
  3. Online Catalogue - CDC Library, nepaknol.net. Retrieved 19 August 2019.
  4. Sarthak Mani, U r welcome, wanna cu ASAP 4 a drink, Nepali Times, #770, 7-13 August 2015. Retrieved 20 August 2019.
  5. New Books, The Kathmandu Post, 19 October 2012. Retrieved 19 August 2019.
  6. Shashi Lumumbu’s ‘Tapaswi Pahad’ released, setopati.net, 16 December 2018. Retrieved 19 August 2019.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்னா_புத்தக_பந்தர்&oldid=4090563" இலிருந்து மீள்விக்கப்பட்டது