இரத்ன மஞ்சரி தேவி

இரத்னா மஞ்சரி தேவி (Ratna Manjari Devi-1 சனவரி 1935 - 21 சனவரி 2019) ஒரு பழமையான இந்திய அரசியல்வாதியும் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பிருரி ராஜ்பாதியின் இராணியும் ஆவார்.[1] இவர் ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 1977 ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில், இரத்னா மஞ்சரி தேவி 7வது ஒடிசா சட்டமன்றத்திற்கு பெர்காம்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு ஒடிசாவின் முன்னாள் முதல்வர் பினாயக் ஆச்சார்யாவை தோற்கடித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5]

இரத்ன மஞ்சரி தேவி
உறுப்பினர்-ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
1977-1980
முன்னையவர்பினாயக் ஆச்சார்யா
பின்னவர்குருஷ்னா சந்திர பட்நாயல்
தொகுதிபெர்காம்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1935-01-01)சனவரி 1, 1935
இறப்புசனவரி 21, 2019(2019-01-21) (அகவை 84)
அரசியல் கட்சிசுயேச்சை

குடும்பம்

தொகு

இரத்னா மஞ்சரி தேவி சனவரி 1, 1935-இல் பிறந்தார்.[6] இவரது தந்தை பெயர் நாகேஷ்வர் பக்சி ராய். இவர் கஞ்சமில் உள்ள பிருரி ராஜ்பாதியின் ராஜாவான சிசீர் குமார் நரேந்திர தேவ் என்பவரை மணந்தார்[7] இத்தம்பதியருக்கு 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் இருந்தனர்.[8] இவரது கணவர் சிசீர் குமார் நரேந்திர தேவ் ஒடிசாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.[9] இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக ஒடிசா அரசியலில் தீவிரமாக இருந்தார்.[10] நரேந்திர தேவ் பெர்காம்பூர் சட்டமன்றத்திலிருந்து 3வது ஒடிசா சட்டமன்றத்திற்கு இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1961 முதல் 1967 வரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[11]

அரசியல்

தொகு

இரத்னா மஞ்சரி தேவி தனது கணவர் ராஜா சிசீர் குமார் நரேந்திர தேவ் இறந்த பிறகு அரசியலில் ஈடுபடலாலனார்.[12] அரசியலில் சேருவதற்கு முன்பு பல்வேறு பிராந்திய பெண்கள் அமைப்புகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு கொண்டிருந்தார்.[13] இவர் 1977 ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில் பெர்காம்பூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் முதல்வரும், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினருமான பினாயக் ஆச்சார்யாவை தோற்கடித்து 7வது ஒடிசா சட்டப் பேரவைக்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[14] இவர் 26 சூன் 1977 முதல் 17 பிப்ரவரி 1980 அன்று சட்டமன்றம் கலைக்கப்படும் வரை இந்த சட்டமன்றத்தில் உறுப்பினராகப் பணியாற்றினார்.[15]

இறப்பு

தொகு

இரத்னா மஞ்சரி தேவி 21 சனவரி 2019 அன்று இறந்தார். இறக்கும் போது இவருக்கு வயது 84.[16]

மேற்கோள்கள்

தொகு
  1. Pioneer, The. "Ganjam dist sent 8 women MlAs; six of them queens". The Pioneer (in ஆங்கிலம்). Archived from the original on 2021-10-31. பார்க்கப்பட்ட நாள் 2019-03-19.
  2. Empowerment of Women in India. Northern Book Centre.
  3. "Ratna Manjari Devi". Odisha Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 31 October 2021.
  4. "Ganjam dist sent 8 women MlAs; six of them queens". Daily Pioneer. 13 June 2015. பார்க்கப்பட்ட நாள் 1 November 2021.
  5. "Late Ratna Manjari Devi". odishaassembly.nic.in. Odisha Assembly. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.
  6. "MLA Ratna Manjari Devi Profile | BERHAMPUR Constituency". naveenpatnaik.com. Archived from the original on 2022-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-03-19.
  7. Bhuiyan, Dr. Dasarathi (November 2014). "Women Politics in Odisha : Trends and Challenges". Odisha Review (November 2014): 52. http://magazines.odisha.gov.in/Orissareview/2014/Nov/engpdf/48-56.pdf. பார்த்த நாள்: 19 March 2019. 
  8. "MLA Ratna Manjari Devi Profile | BERHAMPUR Constituency". odishahelpline.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-19.
  9. "MLA Sisir Kumar Narendra Deb Profile | BERHAMPUR Constituency". naveenpatnaik.com. Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2019-03-19.
  10. "MLA Sisir Kumar Narendra Deb Profile | BERHAMPUR Constituency". www.odishahelpline.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-19.
  11. "Late Sisir Kumar Narendra Deb". odishaassembly.nic.in. Odisha Assembly. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.
  12. Nayak, Dr Smita (2016-03-01). Whither Women: A Shift from Endowment to Empowerment (in ஆங்கிலம்). EduPedia Publications (P) Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781523724116.
  13. "Late Ratna Manjari Devi". odishaassembly.nic.in. Odisha Assembly. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.
  14. Pioneer, The. "Ganjam dist sent 8 women MlAs; six of them queens". The Pioneer (in ஆங்கிலம்). Archived from the original on 2021-10-31. பார்க்கப்பட்ட நாள் 2019-03-19.
  15. "MLA Ratna Manjari Devi Profile | BERHAMPUR Constituency". naveenpatnaik.com. Archived from the original on 2022-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-03-19.
  16. "ବିଧାନ ସଭାରେ ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳିକୁ ନେଇ ବିରୋଧୀଙ୍କ କ୍ଷୋଭ – ସତ୍ଯର ସ୍ବର ନିର୍ଭୟ". nirvaynews.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 19 March 2018. பார்க்கப்பட்ட நாள் 2019-03-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்ன_மஞ்சரி_தேவி&oldid=4108335" இலிருந்து மீள்விக்கப்பட்டது