இரன்பீர் சிங் பதானியா

இந்திய அரசியல்வாதி

இரன்பீர் சிங் பதானியா (Ranbir Singh Pathania) (பிறப்பு 1979) சம்மு-காசுமீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார், பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த இவர், சம்மு-காசுமீரில் உள்ள உதம்பூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1] சம்மு-காசுமீர் யூனியன் பிரதேசத்தின் எல்லை நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்பு ராம்நகர் சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[2][3][4][5][6][7][8]

இரன்பீர் சிங் பதானியா
Ranbir Singh Pathania
இரன்பீர் சிங் பதானியா
சம்மு காசுமீர் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
முன்னையவர்புதிதாக உருவாக்கப்பட்டத் தொகுதி
தொகுதிஉதம்பூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி
செய்தித் தொடர்பாளர் , பாரதிய ஜனதா கட்சி , சம்மு காசுமீர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2017
சம்மு காசுமீர் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
23 திசம்பர் 2014 – 21 நவம்பர் 2018
முன்னையவர்அர்சு தேவ் சிங் (Harsh Dev Singh)
பின்னவர்Legislative Assembly of J&K State dissovled
தொகுதிராம்நகர் சட்டமன்றத் தொகுதி, சம்மு காசுமீர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1979
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்வழக்கறிஞர், அரசியல்வாதி

ராம்நகர் சட்டமன்ற உறுப்பினாராக தனது முதல் பதவிக்காலத்தில், பதானியா தனது தொகுதியில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களில் பணியாற்றினார். சாலை இணைப்பு இல்லாத ராம்நகரில் அவரது ஆட்சிக் காலத்தில் பல்வேறு சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டப்பட்டன.[9] அவரது முயற்சியால் சம்மு-காசுமீர் அரசின் உயர்கல்வித் துறையின் மூலம் இரண்டு பட்டப்படிப்பு கல்லூரிகள் அனுமதிக்கப்பட்டன. ஒன்று மசல்டாவிலும் (Majalta) மற்றொன்று துது -பசன்த்கரிலும் (Dudu-Basantgarh) அமையப்பெற்றன .[10]அவர் கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார் .[11][12]

குறிப்புகள்

தொகு
  1. "Result of Assembly Constituency 60 - UDHAMPUR EAST (Jammu & Kashmir)". பார்க்கப்பட்ட நாள் 8 October 2024.
  2. "Orders of J&K Delimitation Commission take effect". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-05-21. பார்க்கப்பட்ட நாள் 2022-05-21.
  3. "Ranbir Singh Pathania, MLA Ramnagar meets Governor". 5 Dariya News. பார்க்கப்பட்ட நாள் 2023-05-12.
  4. "Legislative Assembly Elections 2014-Affidavits of Contesting Candidates-62-Ramnagar". ceojk.nic.in. பார்க்கப்பட்ட நாள் 27 March 2024.
  5. "Ranbir Singh Pathania(Bharatiya Janata Party(BJP)):Constituency- RAMNAGAR(UDHAMPUR) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2023-05-12.
  6. "Ramnagar Constituency". Udhampur (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-12.
  7. "6 candidates file nominations for Udhampur, Ramnagar, Chenani constituencies - Early Times Newspaper Jammu Kashmir". www.earlytimes.in. பார்க்கப்பட்ட நாள் 2023-05-12.
  8. Asma, Syed (2014-12-29). "A Panther Without Dots". Kashmir Life (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-12.
  9. "Hollow promises on Degree College at Majalta unacceptable: Pathania". Daily Excelsior. 10 May 2016. பார்க்கப்பட்ட நாள் 11 May 2016.
  10. "Sanctioning of college a historic decision for Dudu-Basantgarh: MLA". Daily Excelsior. 14 May 2018. பார்க்கப்பட்ட நாள் 15 May 2018.
  11. Excelsior, Daily (2023-03-01). "Govt's tough stance on militancy has yielded results: Pathania". Jammu Kashmir Latest News | Tourism | Breaking News J&K (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-12.
  12. "हाशिए पर खड़ी ताकतें कर रहीं तबाही मचाने का प्रयास पठानिया - BJP state spokesman Ranbir Singh Pathania press conference - Jammu and Kashmir Udhampur Local News". Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-05-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரன்பீர்_சிங்_பதானியா&oldid=4120069" இலிருந்து மீள்விக்கப்பட்டது