இரம்சான் கான்
முன்னா மாஸ்டர் என்று பிரபலமாக அறியப்படும் இரம்சான் கான் (Ramzan Khan) ஒரு இந்திய பாடகரும் சமூக சேவகருமாவார். இவர் பக்தி பாடல்களை பாடி தனது மாடுகளை கவனித்து வருகிறார். [1] [2] இவர் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கலைக்கு இவர் செய்த பங்களிப்புக்காக 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. [3]
இரம்சான் கான் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | முன்னா மாஸ்டர் |
குடியுரிமை | இந்தியா |
பணி | இந்திய பாடகர், சமூக சேவகர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சிறீ சியாம் சுரபி வந்தனா |
பிள்ளைகள் | பெரோசு கான் (மகன்) |
விருதுகள் | பத்மசிறீ (2020) |
2019 நவம்பரில் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் சமசுகிருத வித்யா தர்ம விக்யான் துறையில் உதவி பேராசிரியராக இவரது மகன் பெரோசு கான் என்பவரை நியமித்ததில் சர்ச்சை எழுந்ததையடுத்து, மாடுகள் மற்றும் கிருட்டிண-பக்தி மீதான தனது அர்ப்பணிப்புக்காக இவர் வெளிச்சத்திற்கு வந்தார். சமசுகிருத மொழியில் சாத்திரி பட்டம் பெற்ற இவர், [4] சிறீ சியாம் சுரபி வந்தனா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
குறிப்புகள்
தொகு- ↑ "Credit goes to 'gau mata' for my Padma Shri: Bhajan singer Munna master". https://www.zeebiz.com/india/video-gallery-credit-goes-to-gau-mata-for-my-padma-shri-bhajan-singer-munna-master-118304.
- ↑ "जानें- कौन हैं गोसेवा करने वाले मुन्ना मास्टर जिन्हें मिलेगा पद्मश्री". https://aajtak.intoday.in/story/know-about-padma-awardee-munna-master-father-of-feroze-khan-1-1158194.html.
- ↑ "I owe the coveted award to gau seva: Padma Shri awardee Ramzan Khan". https://www.outlookindia.com/newsscroll/i-owe-the-coveted-award-to-gau-seva-padma-shri-awardee-ramzan-khan/1718725.
- ↑ Bhura, Sneha (30 Nov 2019). "Rights and rituals". The Week. பார்க்கப்பட்ட நாள் 2020-04-14.