இரம்யா சதாசிவம்

இரம்யா சதாசிவம் (Ramya sadasivam) என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் ஓவியர் ஆவார். இவர் வரைந்த ஓவியங்களுக்காக பிரபுல்ல தணுக்கர் விருது 2016 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. சுபந்தன் சிறந்த கலைஞர் விருதும் வழங்கப்பட்டது[1].

இரம்யா சதாசிவம் உயிர்த் தொழில் நுட்பத்தில் பட்டமும், மேற்கத்தியக் கலைகளில் பட்டயமும் பெற்றார். சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தாலும் 2006 ஆம் ஆண்டுதன் முதன் முதலாக வரையத் தொடங்கினார். தொடக்கத்தில் கரிக்கோலில் வரைந்தார். பின்னர் ஆயில் வண்ணத்தில் வரைந்தார். இந்திய நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், சிற்றூர்ப்புற வாழ்க்கை முறைகள், உழைப்பாளிகளின் அன்றாட அலுவல்கள், பெண்களின் நிலைகள் ஆகியனவற்றை ஓவியத்தில் சித்தரித்துள்ளார். சிற்பங்கள், இயற்கைக் காட்சிகள் ரசிப்பவர்களைத் தாண்டி, யதார்த்த நிகழ்வுகளை ஓவியமாகப் பதிவு செய்து அதில் வெற்றியும் பெற்றார். பல்வேறு வகையான ஓவியங்களில் திறமை பெற்றவர் என்றாலும் உருவக கலை – குறிப்பாக நிர்வாண ஓவியங்களை[2] சித்தரிப்பத்தில் கை தேர்ந்தவராக உள்ளார்.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. போகிற போக்கில்: தூரிகையால் பேசும் காரிகை, தி இந்து (தமிழ்), நாள்: நவம்பர் 6, 2016.
  2. "ஆடைகளற்ற கலை கண்களை உறுத்துகிறதா?- இயற்கையை இழிவாகப் பார்க்கின்றனர்!". nakkheeran (in ஆங்கிலம்). 2019-11-01. பார்க்கப்பட்ட நாள் 2021-11-03.
  3. "நிர்வாண ஓவியங்கள் மிகப் பெரிய கலை, அதை பெருமையாக வரைகிறேன் – சென்னை ஓவியர் ரம்யா சதாசிவம்". Indian Express Tamil. பார்க்கப்பட்ட நாள் 2021-11-03.
  4. "நான் ஏன் நிர்வாண ஓவியம் வரைகிறேன்?". BBC News தமிழ். 2019-10-31. பார்க்கப்பட்ட நாள் 2021-11-03.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரம்யா_சதாசிவம்&oldid=3850809" இலிருந்து மீள்விக்கப்பட்டது