இரம் (Iram; அரபு மொழி: إرَم‎) என்பது அரேபிய பாலைவனத்தில் ஆது சமுதாயத்தினர் வாழ்ந்த புதையுண்ட நகரம் ஆகும். அரேபிய பாலைவனத்தில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட உபர் நகரமே "இரம் நகரம்" என பெரும்பான்மை மக்களால் நம்பப்படுகிறது.[1] உலகில் அழிந்து போன நகரங்களில் இரம் நகரமும் ஒன்றாகும்.

மண்ணில் புதையுண்ட உபர் நகரம்

இரம் நகர அகழ்வாராய்ச்சி

தொகு
 
செயற்கைக்கோள் உதவியுடன் படம் பிடிக்கப்பட்ட பூமியினுள் புதைந்த இரம் நகர படம்

நிக்கோலஸ் க்லாப் என்ற தொல்பொருள் ஆரய்ச்சியாளர் ஆது சமூகத்தார் வாழ்ந்த உபர் நகரை கண்டுபிடித்தார். அகழ்வாராய்ச்சிக்காக தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)( NASA) மூலம் குறிப்பிட்ட அந்தப் பகுதி செயற்கைக்கோள் உதவியுடன் படம் பிடிக்கப்பட்டது. பின் கலிபோர்னியாவில் உள்ள ஹன்டிக்டன் நூலகத்தில் பழமையான வரைபடங்கள்(map) மற்றும் அதற்கான விளக்கங்கள்(manuscripts) பற்றி ஆராயப்பட்டதில் கி.பி 200ம் ஆண்டு கிரீசு-எகிப்து புவியியல் வல்லுனர்களால் வரையபட்ட வரைபடம் கிடைத்தது.இதை வைத்து அந்த நகரம் தோண்டும் பணி நிறைவடைந்த நிலையில் ஆது சமுகத்தினர் வாழ்ந்த 'இரம்' என்ற உபர் நகரம் கண்டறியபட்டது.[2][3]

இரம் நகர தோற்றம்

தொகு

இரம் நகரம் 12 மீட்டர் அழமான மணல் அடுக்குகளால் மூடப்பட்டு இருந்ததை ஆய்வாளர்கள் கணகிட்டுள்ளனர்.தோண்டி எடுக்கப்பட்ட 'இரம்' நகரில் உயரமான தூண்கள் மற்றும் கோபுரங்கள் இருந்தன. 10 அடி உயரமான சுவர்கள் மற்றும் மூலைகளில் 8 உயரமான கோபுரங்கள் கொண்ட பெரிய எண்கோண வடிவ கோட்டை இருந்தது.ஒரு புதைகுழி ஒரு சரிந்த போது கோட்டையின் ஒரு பெரும் பகுதி அழிந்து விட்டது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Noegel, Scott B (2010). The A to Z of Prophets in Islam and Judaism. Scarecrow Press. p. 151. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-7603-3. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)
  2. Nicholas Clapp, The Road to Ubar: Finding the Atlantis of the Sands, Houghton Mifflin (1999),பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-95786-9.
  3. Ranulph Fiennes, Atlantis of the Sands: The Search for the Lost City of Ubar, Bloomsbury (1992), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7475-1327-9
  4. http://ntrs.nasa.gov/archive/nasa/casi.ntrs.nasa.gov/20020080944.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரம்_நகரம்&oldid=3580775" இலிருந்து மீள்விக்கப்பட்டது