இராகுல் கசுவான்

இந்திய அரசியல்வாதி

இராகுல் கசுவான் (Rahul Kaswan; பிறப்பு 20 சனவரி 1977) என்பவர் இராசத்தானின் சுருவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2014 முதல் சுரு மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்து வருகின்றார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார்.[1]

இராகுல் கசுவான்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
முன்னையவர்இராம் சிங் கசுவான்
தொகுதிசுரு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 சனவரி 1977 (1977-01-20) (அகவை 47)
சதுப்பூர், இராசத்தான், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (2024–present)
பிற அரசியல்
தொடர்புகள்
பாரதிய ஜனதா கட்சி (2014–2024)
பிள்ளைகள்2
பெற்றோர்இராம் சிங் கசுவான் (தந்தை)
கமலா (தாய்)
வாழிடம்(s)தீப் நிவாசு, சதுப்பூர்
கல்விஇளநிலை வணிகவியல், (தில்லி பல்கலைக்கழகம்)

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

கசுவான் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த இராம் சிங் கசுவானின் மகனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தீப் சந்த் கசுவானுடைய பேரனும் ஆவார்.[2] இவரது தாயார் கமலா கசுவானும் இப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.[2] இவருடைய மூதாதையர்கள் அரியானா பிவானி மாவட்டத்தின் மதானி கிராமத்திலிருந்து இராசத்தானின் சுரு மாவட்டத்தின் கல்ரி கிராமத்திற்குக் குடிபெயர்ந்தனர்.

அரசியல்

தொகு

கசுவான் 2014 மக்களவைத் தேர்தலில் பெரிய அளவில் வெற்றியைப் பெற்று முதல் முறையாக இராசத்தானிலிருந்து இளைய மக்களவை உறுப்பினர் ஆனார். இவர் 294,739 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது சுரு தொகுதியில் மிக அதிக வாக்கு வித்தியாசமாகும். இதன் மூலம் இராசத்தானில் உள்ள 25 இடங்களில் 6வது அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையினைப் பெற்றார். சுரு மக்களவைத் தொகுதியில் காங்கிரசின் முதல் முறையாக பிரதாப் புனியாவை எதிர்த்து இவர் போட்டியிட்டார். சுருவிலிருந்து மக்களவையின் உறுப்பினராக நான்கு முறை பதவி வகித்த தனது தந்தையினைத் தொடர்ந்து மக்களவை உறுப்பினர் ஆனார்.[2][3]

2019ஆம் ஆண்டு மீண்டும் இதே தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2024 இந்திய பொதுத் தேர்தலுக்கு முன்பு இவர் மார்ச் 11 அன்று இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். அரசியல் காரணங்களைச் சுட்டிக்காட்டி பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகினார். இராசத்தானின் சுரு மக்களவைத் தொகுதியில் இரண்டு வாய்ப்பு அளித்த பிரதமர் நரேந்திர மோடி கட்சித் தலைவர்களுக்கு இவர் நன்றி தெரிவித்தார்.[4] இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Rahul Kaswan : कौन हैं राहुल कस्वां? क्या चूरू में झाझड़िया को दे पाएंगे शिकस्त, जानें उनका सोशल स्कोर". Zee News (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-05-21.
  2. 2.0 2.1 2.2 "Constituencywise-All Candidates". Eciresults.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Rahul Kaswan: know your politicians profile, india.gov.in
  4. 4.0 4.1 "Churu MP Rahul Kaswan resigns from BJP, joins Congress ahead of Lok Sabha elections". The Economic Times. 2024-03-11. https://economictimes.indiatimes.com/news/elections/lok-sabha/india/churu-mp-rahul-kaswan-resigns-from-bjp-joins-congress-ahead-of-lok-sabha-elections/articleshow/108389642.cms?from=mdr. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராகுல்_கசுவான்&oldid=4107642" இலிருந்து மீள்விக்கப்பட்டது