இராகேசு சூட்
இராகேசு சூட் (Rakesh Sood, 5 பிப்பிரவரி 1953) இந்தியத் தூதுவர், எழுத்தாளர், வெளியுறவுத்துறை அதிகாரி எனக் கருதப்படுகிறார். இவர் அணு ஆயுதக் குறைப்பு, அணு ஆயுதப் பரவல் தடை ஆகியவற்றின் இந்தியப் பிரதமரின் தனித் தூதுவராக 2014 ஆம் ஆண்டு மே மாதம் வரை அப்பதவியில் இருந்தார்.[1]
பணிகள்
தொகுஆப்கானிசுத்தான், நேபாளம், பிரான்சு ஆகிய நாடுகளில் இந்திய நாட்டுத் தூதுவராகவும் பணியாற்றினார். 1998இல் இந்தியா ஓர் அணு அயுத நாடு என உலகுக்கு அறிவித்த சூழ்நிலையில் அப்போதைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரஜெசு மிசுராவுடன் உலக நாடுகளுக்குப் பயணம் செய்தபோது இராசேசு சூட்டும் அவருடன் சென்றார். இந்திய அயலகத்துறையிலிருந்து 2013 மார்ச்சு மாதம் ஒய்வு பெற்றார்.