இராசத்தான் கல்லூரி

இராசத்தான் கல்லூரி (Rajasthan College) என்பது இராசத்தான் பல்கலைக்கழகம் உறுப்புக் கல்லூரி ஆகும். இது இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஒரு முன்னணி கலை மற்றும் சமூக அறிவியல் கல்லூரியாகும். இது 1957ஆம் ஆண்டில் "இராசத்தான் அரசு கல்லூரி" என நிறுவப்பட்டது. இது ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் ஏழு உறுப்புக் கல்லூரிகளில் ஒன்றாகும்.[1] இக்கல்லூரியில் நுண்கலை, சமூக அறிவியல் மற்றும் மொழிகளில் இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. இது ஜவஹர்லால் நேரு சாலையில் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் உள்ள விவேகானந்தர் விடுதி, பல்கலைக்கழக விடுதி, கல்லூரியுடன் தொடர்புடைய விடுதிகள் ஆகும்.

இராசத்தான் கல்லூரி
நிறுவப்பட்டது1957; 67 ஆண்டுகளுக்கு முன்னர் (1957)
வகைஇளநிலைக் கல்லூரி
அமைவுஜெய்ப்பூர், இராசத்தான்,  இந்தியா
வளாகம்ஜெய்ப்பூர்
இணைப்புகள்இராசத்தான் பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்

தொகு
  1. "University Rajasthan College welcomes you" (PDF). University Rajasthan College. Archived from the original (PDF) on 15 April 2021. பார்க்கப்பட்ட நாள் 15 April 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசத்தான்_கல்லூரி&oldid=4155034" இலிருந்து மீள்விக்கப்பட்டது