இராசராசேசுவர நாடகம்
இராசராசேசுவர நாடகம் சோழ மன்னனாகிய இராசராசன் மீது இயற்றப்பட்ட நாடக வகையைச் சேர்ந்த காப்பியமாகும்.
இராசராசனின் வாழ்க்கை வரலாறு, ஆட்சிச் சிறப்பு, சோழ நாட்டு வளம், அவனது வீரம், ஆட்சிச் சிறப்பு, நீதி பரிபாலனம் என்பவற்றோடு பல அருஞ்செயல்களையும் பற்றிக் கூறுகின்றது. இந்நாடகத்தை விசேடமான காலங்களில் இராசராசன் கட்டுவித்த தஞ்சைப் பரிகதீசுவரர் கோவிலில் நடித்துக் காட்டினர் என்றும், அவ்வாறு நடிப்பதற்குத் தேவையான நிவந்தங்களை முதலாம் இராசேந்திரன் வழங்கினான் என்றும் இராசேந்திரனது கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இந்நாடகத்தின் ஆசிரியர் பெயர் முதலான வரலாறுகள் எவையும் கிடைத்தில.[1]