இராசா வி. இரமணி

இந்திய அமெரிக்க அறிவியலாளர்

இராசா வி. இரமணி (Raja V. Ramani) ஓர் இந்திய-அமெரிக்க விஞ்ஞானியாவார். சுரங்கப் பொறியியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார். காற்றில் பரவும் துகள்களின் தன்மை மற்றும் கட்டுப்பாட்டை நன்கு புரிந்துகொள்வதன் மூலம் சுரங்கத் தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் இவர் மிகவும் பிரபலமானார்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இந்தியாவின் தன்பாத் நகரத்தில் உள்ள இந்திய சுரங்கப் பள்ளியில் அறிவியலில் இளநிலை பட்டம் பெற்றார். 1968 ஆம் ஆண்டில் அறிவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். 1970 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட்டம் பெற்றார். இதே ஆண்டு முதல் பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் ஆசிரிய உறுப்பினராக உள்ளார். 1998 ஆம் ஆண்டில், அவர் சியார்ச்சு எச்.சூனியர் மற்றும் அன்னே பி. டெய்க் சுரங்கப் பொறியியல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[1]

2005 ஆம் ஆண்டில், வான்வழித் துகள்களின் தன்மை மற்றும் கட்டுப்பாட்டின் மூலம் சுரங்கத் தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள தேசியப் பொறியியல் அகாடமியின் உறுப்பினராக இரமணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

2014 ஆம் ஆண்டில் இரமணி இந்திய தொழில்நுட்பக் கழகமான கரக்பூரில் புல்பிரைட்டு-நேரு இருக்கைக்கு சிறப்புத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Biographies of U.S. Fellows". United States-India Educational Foundation. 2014-01-01. பார்க்கப்பட்ட நாள் 2016-07-05.
  2. "Biographies of National Academy of Engineering Members". United States National Academy of Engineering. 2005-01-01. பார்க்கப்பட்ட நாள் 2016-07-05.
  3. "Emeritus Professor awarded Fulbright Distinguished Chair Award in India". Penn State University. 2014-10-07. பார்க்கப்பட்ட நாள் 2016-07-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசா_வி._இரமணி&oldid=3508223" இலிருந்து மீள்விக்கப்பட்டது