இராசிவ் காந்தி உயிரி தொழிற்நுட்ப மையம்

இராசிவ் காந்தி உயிரிதொழிற்நுட்ப மையம் (Rajiv Gandhi Centre for Biotechnology) என்பது இந்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைக்கப்பெற்றுள்ளது. இந்த மையம் இந்திய அரசின் உயிரிதொழிற்நுட்ப துறையின் கீழ் அமைக்கப்பட்ட தன்னாட்சி நிறுவனம் ஆகும். இதற்கு முன்பாக, இந்த மையம் கேரள அரசின் ஒர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையமாக இருந்துவந்தது.

இராசிவ் காந்தி உயிரி தொழிற்நுட்ப மையம்
குறிக்கோளுரைமேம்பாடன நாளைய தினத்திற்கான கண்டுபிடிப்புகள் (Discoveries for better tomorrow)
உருவாக்கம்1990
Parent institution
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, (உயிரிதொழில்நுட்பவியல் துறை (இந்திய அரசு)
Academic affiliation
கேரளப் பல்கலைக்கழகம், மண்டல உயிரித்தொழில்நுட்பவியல் மையம், மணிப்பால் உயர் கல்வி நிறுவனம்
பணிப்பாளர்பேராசிரியர் சந்திரபாசு நாராயண
கல்வி பணியாளர்
45
நிருவாகப் பணியாளர்
27 + 54
அமைவிடம்
பூஜாபுரா, திருவனந்தபுரம்-695 014
,
வளாகம்நகரம்
இணையதளம்https://rgcb.res.in/

மேனாள் குடியரசுத் தலைவர், அப்துல் கலாம் அவர்களால், 18 நவம்பர் 2002 அன்று இந்த மையம் துவங்கி வைக்கப்பட்டது. இந்நிறுவனம் மூலக்கூறு உயிரியல் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஆழ்நுட்பமான துறைகளைக் கொண்டுள்ளது. அவையாவன:

  • புற்றுநோய் ஆராய்ச்சி
  • இருதய நோய் மற்றும் நீரிழிவு உயிரியல்
  • நோய்க்கிருமி உயிரியல்
  • மீளுருவாக்க உயிரியல்
  • செடிசார்ந்த உயிரிதொழிற்நுட்பம் & நோய் உயிரியல்
  • நரம்பு சார் உயிரியல்
  • இனப்பெருக்க உயிரியல்
  • பல்துறை உயிரியல்

அண்மையில், (2020) பி.எஸ்.எல் 4 ஆய்வகப் அமைப்புப் பணிகள் தொடங்கியது.[1]

மேற்கோள்கள்

தொகு